News

Saturday, 13 April 2019 02:18 PM

ஐக்கிய நாட்டினை தொடர்ந்து தற்போது ரஷ்யாவும் பிரதமர் மோடிக்கு உயரிய விருதானபுனித ஆண்ட்ரூ' என்னும்  விருதினை அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இதற்கான ஆணையத்தில்  ஒப்புதலிட்டுள்ளார்  என  ரஷ்ய தூதரகம் அதன் டிவிட்டர் பக்கத்தில் தகவல்கள் வெளியிட்டுள்ளது.

சர்வதேச அளவில் இதுவரை 8 விருதுகளை வாங்கியுள்ளார். இந்த மாதத்தில் அவருக்கு கிடைத்த இரண்டாவது  சர்வதேச விருதாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ரஷ்யா-இந்தியா இடையிலான  உறவை வலிமை படுத்தி  சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த விருதினை வழங்குவதாக  அந்நாட்டின்  அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.   இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டது. ரஷ்யா தூதரகம் இதனை உறுதி செய்துள்ளது.

 இது குறித்து, பிரதம மந்திரி மோடி  கூறுகையில், மரியாதைக்குரிய இந்த  ‘புனித ஆண்ட்ரூ ' விருதினை பெறுவதில் மிகுந்த பெருமை கொள்கிறேன். மேலும் இந்த தருணத்தில்  ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)