பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் வீண்ட் போர்டல் தொடங்கும் போது, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விவசாயிகளின் காப்பீட்டு கோரிக்கைகளை வழங்கினார். இதன் போது, 5 லட்சத்து 60 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், ரூ. 258 கோடி காப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ளார்.
பல்வேறு மாநிலங்களின் பிரீமியம் மானியம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதால், விவசாயிகளுக்கு அதன் பலன் கிடைக்கவில்லை, மேலும் பல விவசாயிகளின் கோரிக்கைகள் நிலுவையில் இருந்தது. பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் பயிர்களை காப்பீடு செய்து, கோரிக்கைகளுக்காகக் காத்திருந்த விவசாயிகளுக்கு, இது ஒரு பெரிய நற்செய்தியாகும். அனைத்து விவசாயிகளுக்கும் இந்திய அரசு மொத்தம் ரூ.258 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. நீங்களும் இந்தக் கோரிக்கைக்காகக் காத்திருந்தால், உங்கள் பெயரைப் பார்க்க, பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் சரிபார்க்கலாம்.
பயிர் காப்பீடு திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:
பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா 2016 இல் தொடங்கப்பட்டது. விவசாயத் துறையில் நல்ல உற்பத்தியை ஊக்குவிப்பதே இதன் இலக்காக இருந்தது. இதில், எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு விவசாயிகளுக்கு நிதியுதவி அளித்து, விவசாயிகளின் வருவாயை நிலைப்படுத்தி, விவசாயத்தில் தொடர்ச்சியை உறுதி செய்ய உதவுகிறது. இத்திட்டத்தின் கீழ், வானிலை அல்லது விபத்து காரணமாக ஏற்படும் பயிர் சேதத்திற்கு இடாக. விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்களால் பணம் செலுத்தப்படும்.
விவசாயிகளின் பயிர்கள் ஒவ்வொரு ஆண்டும் எதிர்பாராத, பருவமழையால் நாசமாகின்றன. இது விவசாயிகளை பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்த பயிர்க் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது.
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், விவசாயி 2 சதவீத பிரீமியத்தை மட்டுமே செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள பிரீமியத் தொகையை மாநில அரசும், மத்திய அரசும் ஏற்கிறது, இதில் மாநில அரசுகள் உரிய நேரத்தில் பிரீமியத்தைச் செலுத்தவில்லை என்ற பிரச்சனை எழுந்தது. இதனால் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு கிடைக்கவில்லை. இதற்கு மத்திய அரசு தற்போது தீர்வு கண்டுள்ளது. இனி மாநில அரசுகளின் பிரீமியத் தொகைக்காக விவசாயிகள் காத்திருக்க வேண்டியதில்லை. அவர்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு தொடர்ந்து வழங்கப்படும்.
PM Fasal Bima Yojana திட்டத்தின் கீழ், பாரதி அக்சா, பஜாஜ் அலையன்ஸ், அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் நிறுவனம், HDFC எர்கோ, சோழமண்டலம், ICICI லோம்பார்ட், IFFCO Tokio, National Insurance, Reliance General உள்ளிட்ட சுமார் 2 டஜன் காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டை வழங்குகின்றன.
மேலும் உங்களது நிலை தமிழில் அறிய: கிளிக் செய்து பார்க்கவும்.
மேலும் படிக்க:
"பயிர்க் காப்பீட்டிற்கான தொழில்நுட்பங்களை இந்திய அமைச்சகம் மேம்படுத்தியுள்ளது"
தமிழகத்திற்கு மாவட்டம் வாரியாக, ஸ்டேஷன் வாரியாக மழை எச்சரிக்கை!