மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 February, 2022 4:20 PM IST
Poco M4 Pro 5G: Rs. 15 thousand, 5G smartphone on a budget!

போக்கோ நிறுவனத்தின் புதிய M4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகிவிட்டது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் இந்திய வெர்ஷன் அம்சங்கள் ரெட்மி நோட் 11T 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருப்பது சிறப்பாகும்.

அதன்படி போக்கோ M4 ப்ரோ 5ஜி மாடலில் 6.6 இன்ச் FHD+ 50Hz, 60Hz மற்றும் 90Hz என டைனமிக் ஸ்விட்ச் ரிப்ரெஷ் ரேட், 16Mஜ செல்ஃபி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர், 5ஜியை சப்போர்ட் செய்யும் வசதி, அதிகபட்சம் 6GB ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமராவும், இதில் வழங்கப்பட்டுள்ளது.

போக்கோ M4 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Poco M4 Pro 5G Features)

இதில், 6.6 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன், டைனமிக் ஸ்விட்ச் ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 810 6nm பிராசஸர், மாலி-G57 MC2 GPU, 4GB LPDDR4X ரேம், 64GB (UFS 2.2) மெமரி, மேலும், 6GB / 8GB LPDDR4X ரேம், 128GB (UFS 2.2) மெமரியும், இதில் இருப்பது குறிப்பிடதக்கது.

அடுத்ததாக, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12.5, ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 0MP பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ், 8MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2, 16MP செல்ஃபி கேமரா, f/2.45, பக்கவாட்டில் கைரேகை சென்சார், IR சென்சார், 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், எப்.எம். ரேடியோ, டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP53), 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யு.எஸ்.பி. டைப் சி, 5000mAh பேட்டரி, மேலும்33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் என சிறப்பு அம்சங்கள், இதில் இடம்பெற்றுள்ளன. உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன் அல்லவா.

போக்கோ M4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பவர் பிளாக், கூல் புளூ மற்றும் போக்கோ எல்லோ என மூன்று நிறங்களில் அறிமுகமாகி உள்ளது. இதன் 4GB + 64GB மாடல் விலை ரூ. 14,999யும், 6GB + 128GB மாடல் விலை ரூ. 16,999யும், 8GB + 128GB மாடல் விலை ரூ. 18,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் பிப்ரவரி 22 ஆம் தேதி துவங்குகிறது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

JSY: ஜனனி சுரக்ஷா யோஜனா: பெண்களுக்கு ரூ 3400 நிதி உதவி, எப்படி விண்ணப்பிப்பது ?

மீண்டும் நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் 54 சீன செயலிகளுக்கு, இந்திய அரசு தடை!

English Summary: Poco M4 Pro 5G: Rs. 15 thousand, 5G smartphone on a budget!
Published on: 15 February 2022, 04:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now