
சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளைக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசியல் கட்சிகளும் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், மக்களவை தேர்தல் வருவதை ஒட்டி அரசியல் கட்சிகளும் அனைத்து வலைத்தளங்களிலும் விளம்பரம் செய்து வருகிறது. பேஸ்புக் தளத்தை பயன்படுத்தி தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் விளம்பரம் செய்து வருகிறது.
இந்தியா முழுவதும் பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 20 கோடிக்கு மேல் உள்ளது. இதனால் அவர்களது விளம்பர உக்திக்கான களம் பேஸ்புக் என்றாகி விட்டது. மக்களவை தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி மே 19-ஆம் வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
பாஜக முதலிடம்
மார்ச் இறுதி வரை சுமார் 50,000 விளம்பரங்கள் பேஸ்புக் வாயிலாக செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்திற்கு ரூ10 கோடி வரையிலான வருமானம் கிடைத்துள்ளது.

"மை பாஸ்ட் வோட் பார் மோடி" மற்றும் "நேஷன் வித் நமோ " போன்ற பக்கங்களின் விளம்பரங்களுக்காக ரூ36 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. "பாரத் கே மன் கீ பாத்" என்ற பக்கத்தின் கீழ் 3700 க்கு மேற்பட்ட விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்காக அக்கட்சியினர் ரூ2 கோடி செலவு செய்துள்ளதது.
மற்ற கட்சிகளின் விவரும் பின்வருமாறு.
காங்கிரஸ் தரப்பில் ரூ 5.91 லட்சம்,
பீஜூ ஜனதா தளம் ரூ 8.56 லட்சம்
தேசியவாத காங்கிரஸ் ரூ 58,335
தெலுங்கு தேசம் ரூ 1.58 லட்சம்
இதை போன்றே மற்ற வலைதள பக்கங்களிலும் அந்தந்த கட்சின் சார்பாக விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.