News

Friday, 10 May 2019 05:18 PM

புதுவை அரசின் விவசாய பயற்சி மையத்தில் உள்ள  பலா மரங்களில் இவ்வாண்டு 20 சதவீதம் அதிகமான  விளைச்சல் கிடைத்துள்ளது. இதனால், மைய வளாகம் முழுவதும் பாலாவின் மணம் நம்மை ஈர்க்கிறது.

புதுச்சேரியில் உள்ள குருமாம்பேட் பகுதியில் விவசாய அறிவியல் நிலையமானது கடந்த நாற்பது வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த மையமானது,விவசாயிகளுக்குத்   தேவையான பயிற்சி, புதிய தொழில் நுட்பம், இயற்கை விவசாயம் என வேளாண்துறைக்கு தேவையான அனைத்து பயிற்சியினை வழங்கி வருகிறது.

புதுவை அரசின் விவசாய பயற்சி மையத்தில், 2 ஏக்கரில் பரப்பளவில் பலா மரங்கள் பயிரிடபட்டு,  பல ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக இளநிலை விஞ்ஞானி நரசிம்மன் கூறுகையில், "கடந்த ஆண்டை விட 20% கூடுதல் வளர்ச்சியை அரசுப் பண்ணையில் பலா பெற்றுள்ளது. இங்குள்ள பலா மரங்களின் வயது 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இவ்வாண்டு இங்கு வேர் பலா மற்றும் நாட்டுப் பலா நல்ல விளைச்சலைத் தந்துள்ளது. இயற்கை உரம் மட்டுமே இட்டு வளர்த்ததால் விளைச்சல் அதிகரித்து, ருசியாகவும் இருப்பதாக கூறினார். இவை தவிர தென்னை, மா, வாழை, கொய்யா, சப்போட்டா போன்ற மரங்கள் இயற்கை உரமிட்டு, முறையாக பராமரிக்க பட்டு வருவதாக தெரிவித்தார். 

இயற்கையாக விளையும் பலா விற்பனையும் இங்கு நடைபெறுவதால், மக்கள் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள் இந்த இயற்கை முறையிலான பலாப்பழங்களுக்கு இப்பகுதி மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்றார்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)