News

Thursday, 18 November 2021 08:15 AM , by: Elavarse Sivakumar

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுப்பொருட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 பொருட்களை அடங்கிய இந்தப் பொங்கல் பரிசுப் பட்டியலில், ரொக்கப்பணம் இடம்பெறாதது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பொங்கல் பரிசு (Pongal gift)

ஆண்டுதோறும் தை முதல்நாள் (ஜனவரி மாதம்) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் மக்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பரிசுப்பொருட்கள் குறித்து தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

பரிசுத் தொகுப்பு (Gift package)

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 20 பொருட்கள் அடங்கியப் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும்.

இதனை வரும் 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைப் பிறப்பித்துள்ளார்.

20 பொருட்கள் (20 items)

இத்தொகுப்பில், பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் இடம்பெற்றுள்ளன.
இவை அடங்கியத் துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்பங்களுக்கு, மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், இப்போதே பரிசுப்பொருட்கள் குறித்து அறிவிப்பு வெளியிட்டது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், கடந்த அதிமுக ஆட்சியில், பரிசுப்பொருட்களுடன் ரூ 2500 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் ரொக்கப்பணம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் பொதுக்கள் சற்று அதிருப்தியடைந்துள்ளனர்.

ஏமாற்றம் (Disappointment)

தைப் பொங்கலை முன்னிட்டு பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரொக்கம் அறிவிக்கப்படாதது, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

இது குறித்து கோட்டை வட்டாரத்தில் விசாரித்த போது, ஏற்கனவே வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மழை நிவாரணம்

இது குறித்து கோட்டை வட்டாரத்தில் விசாரித்த போது, ஏற்கனவே வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் பருவமழைக் காலம் இன்னும் முடியவில்லை. இந்நிலையில் ரொக்கத்துடன் பரிசுத் தொகுப்பு வழங்கினால் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க...

புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

கொரோனா தடுப்பூசி போடவில்லையா? - இனி ரேஷன் பொருட்கள், கியாஸ், பெட்ரோல் கிடையாது!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)