மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 December, 2021 11:40 AM IST
Rs 2500 with Pongal gift! Date Notice!

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகை, வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி, ஜனவரி 17-ஆம் தேதி திங்கள்கிழமை வரை கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு முன்பே பொங்கல் பரிசு தொகுப்பை வெளியிட்டிருந்தது. வருகிற 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு முன்பு குடும்ப அட்டைதார்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், கீழ்காணும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். தற்போது இந்த பொங்கல் பரிசு வழங்கப்படும் தேதியும் அறிவிப்ப்பட்டுள்ளது.

ஜனவரி-3,2022 முதல் தமிழ் நாடு அரசு அறிவித்திருந்த பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொங்கல் செய்ய தேவையான பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை ஆதாவது மொத்தம் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு, 2,15,48,060 குடும்பங்களுக்கு, ரூ.1,088 கோடி செலவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த தொகுப்புடன் முழு கரும்பும் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடதக்கது.

அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் நெய் உள்ளிட்ட 20 பொருட்கள் வழங்கப்பட உள்ள நிலையில், இதற்காக அரசு, ஆவின் நிறுவனத்திடம் 130 கோடி ரூபாய்க்கு நெய் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதனால் கூட்டுறவு நிறுவனங்களுக்கு பெருமளவில் வருவாய் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என தி.மு.க பால்வளத் துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக பலர் வேலை இழந்து தவித்து வந்த நிலையில், மக்களின் நலன் கருதி இத்திட்டத்தை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் கீழ், அரிசி அட்டைதாரர்களுக்கு நிதியுதவி மற்றும் ரேஷன் கிட்(Pongal Gift) வழங்கப்பட்டது.

இந்த பொங்கல் பண்டிகையை மக்கள் முன்பை விட ஒப்பற்ற மகிழ்ச்சியுடன் கொண்டாட, வரவிருக்கும் ஆண்டில், பொங்கல் பரிசு ஜனவரி 3ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க:

Flipkart Sale: மலிவான விலையில் iPhone 12 Mini வாங்க வாய்ப்பு!

Flipkart சலுகை: ரூ.27,000யில் 55 இஞ்ச் Smart TV! தாமதம் வேண்டாம்

English Summary: Pongal gift! Date Notice!
Published on: 18 December 2021, 01:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now