தமிழகத்தில் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
பொங்கல் பரிசு (Pongal Gift)
20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இத்தோடு கரும்பு வழங்குவதற்காக 71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசு தொகுப்பில் முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம் உள்ளிட்ட 21 மளிகை பொருட்கள் இடம்பிடித்துள்ளது. ஜனவரி-3 முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுழற்சி முறை (Rotational)
இந்நிலையில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதன்படி, கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு தெரு வாரியாக சுழற்சி முறையில் நாளொன்றுக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க