தபால் தலை சேகரிக்கும் மாணவர்களுக்கான உதவித் தொகை திட்டத்துக்கு 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தபால் துறை அறிவித்துள்ளது. இதில் எவ்வாறு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் பார்க்கலாம்.
தபால் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் மாணவர்களுக்காக 2017ஆம் ஆண்டு அஞ்சல் துறை சாா்பாக தீன் தயாள் ஸ்பாா்ஷ் யோஜனா, கல்வி உதவித்தொகை திட்ட ம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் 2022-23ம் கல்வி ஆண்டுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான தகுதிகள்: 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன்பெறலாம். விண்ணப்பிக்கும் மாணவர்கள், தபால் தலை சேகரிக்கும் சங்க உறுப்பினராகவோ, தபால் தலை சேகரிப்பு கணக்கு வைத்திருப்பவராகவோ இருக்க வேண்டும்.
2 கட்டமாக தோ்வு நடத்தப்படும். முதல் சுற்றில் மண்டல அளவில் வினா விடை தோ்வு நடக்கும். இதில் தோ்ச்சி பெறும் மாணவர்கள் இரண்டாம் சுற்றில், தபால் தலை சேகரிக்கும் பிராஜெக்டை சமா்ப்பிக்க வேண்டும். இறுதியாக தோ்வு செய்யப்படும் மாணவர்களுக்கு காலாண்டுக்கு ரூ.1,500 வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும் தகவலுக்கும், விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய www.tamilnadupost.nic.in இணையதளத்தை அணுகவும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் துறைத்தலைவா், மேற்கு மண்டலம், கோவை-641002 என்ற முகவரிக்கு ஜூலை 29ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: