Sukanya Samriddhi Yojana- SSY போஸ்ட் ஆபீஸில் பெண் குழந்தைகளுக்காக செயல்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை தொடங்கி இருப்பவர்கள் இந்த முக்கியமான அப்டேட்டை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
தற்போது, போஸ்ட் ஆபீஸ் டிஜிட்டல் சேமிப்பு கணக்கு தொடங்குவது எளிதாகிவிட்டது. IPPB ஆப்பில் அதற்கான நடைமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம் என்பது குறிப்பிடதக்கது. இதனையடுத்து டிஜிட்டல் சேமிப்பு கணக்கை தொடங்கிய பின்பு அதன் வழியே, போஸ்ட் ஆபீஸில் இருக்கும் முக்கியமான சிறுசேமிப்பு திட்டமான செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் எப்படி பணம் செலுத்துவது என்பது குறித்து விரிவாக பார்ப்போம். போஸ்ட் ஆபிஸில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ரெக்கரிங் டெபாசிட் திட்டம், பிபிஎஃப், செல்வ மகள் சேமிப்பு திட்டத்துக்கு ஆன்லைன் வழியே மாத தொகை கட்டலாம் என தெரிவித்திருக்கிறது.
பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு மத்திய அரசின் செல்வ மகள் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயரில் இந்த திட்டத்தை துவங்கி, சேமித்து பயனடையலாம். ஆகவே இந்த திட்டம் பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. வங்கிகளில் இருக்கும் சேமிப்பு கணக்குகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்களை விட இந்த திட்டத்தில் கூடுதலான வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது. இப்போது இந்த திட்டத்தில் இணைந்தவர்கள் மாத தொகையை எப்படி டிஜிட்டல் முறையில் செலுத்தலாம் என்பதையும் பார்ப்போம்.
அதற்கு முதலில் நீங்கள், உங்களுடைய IPPB போபைல் பேங்கிங் செயலியைத் திறந்து, அதில் 4 இலக்க MPINஐப் பயன்படுத்தி உங்கள் கணக்கில் உள்நுழைய வேண்டும். அடுத்ததாக,
1.இப்போது 'DOP சேவைகள்' என்பதைக் கிளிக் செய்து, பின்னர் 'சுகன்யா சம்ரித்தி கணக்கு' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
2. இப்போது SSA கணக்கு எண் மற்றும் DOP வாடிக்கையாளர் ஐடியை உள்ளிடச் செய்யவும்.
3. அடுத்து, வைப்புத் தொகையை உள்ளிட்டு 'பணம்' என்பதைக் கிளிக் செய்யவும்.
4. அதன் பின்னர் செலுத்த வேண்டிய தொகையை உறுதிசெய்து, 'உறுதிப்படுத்து' பட்டனை கிளிக் செய்யவும்.
5. பின்பு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
6. இப்போது நீங்கள் முன்பே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் (Successful message) வெற்றிகரமான செய்தியைப் பெறுவீர்கள்.
எனவே, போஸ்ட் ஆபிஸில் கணக்கு வைத்திருப்பவர்கள், அல்லது மற்ற சேவைகளிலோ அல்லது மற்ற திட்டங்களிலோ தங்களை பதிவு செய்துக் கொண்டவர்கள் IPPB பேக்கிங் செயலி மூலம், போஸ்ட் ஆபிஸிற்கு நடக்காமலே தகவலை பெற்றிடலாம்.
மேலும் படிக்க: