மாதாந்திர சேமிப்பு என்பது நமக்கு பொருளாதாரச் சிக்கல் ஏற்படும் வேளையில், தவறாமல் கைகொடுக்கும். அதற்கு நாம் முதலீடு செய்யும் திட்டமும், வழங்கப்படும் வட்டியும் மிக மிக முக்கியம். அதேவேளையில் நம் முதலீட்டிற்கு அதிக வட்டியும், பாதுகாப்பு உத்தரவாதமும் கட்டாயம் கிடைக்க வேண்டும்.
அப்படிப் பார்க்கும்போது, வங்கிகளைக் காட்டிலும் கூடுதல் வட்டி தருவது அஞ்சலக சேமிப்பும், முதலீடுமே. அதனால்தான் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற அடையாளத்தைத் தாங்கி நிற்கிறது அஞ்சலகங்கள்.
தேசிய சேமிப்புப் பத்திரம் (National Saving Certificate)
அஞ்சலகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் முக்கியமானது தேசிய சேமிப்பு பத்திரம் என்னும் திட்டம். இதில் 15 லட்சம் ரூபாயை முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் உங்கள் தொகை 21 லட்சமாகத் திரும்பி வரும். அதாவது ஆண்டிற்கு 6.8 சதவீதம் வரை வட்டி அளிக்கப்படுகிறது. இதனால் வட்டி மட்டுமே 6 லட்சம் வரைக் கிடைக்கிறது.
வரிவிலக்கு (Tax exemption)
இந்தத் திட்டத்திற்கு வருமானவரி சட்டப்பிரிவு 80C யின் கீழ் ஆண்டிற்கு ஒன்றரை லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
சலுகைகள் (Discounts)
-
5 ஆண்டுகளுக்கு பிறகே திட்டம் முதிர்ச்சி அடையும். எனினும், தேவைப்படும் பட்சத்தில், ஓராண்டிற்கு பிறகே நீங்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது.
-
100 ரூபாயின் மடங்காக முதலீடு செய்ய வேண்டியது கட்டாயம்.
-
தனிநபராகவும் முதலீடு செய்யலாம்.
-
இரண்டு மூன்று பேர் சேர்ந்தும் முதலீடு செய்து கணக்குத் தொடங்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி? (How to apply)
உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அஞ்சலகத்தை நேரில் அணுகி விபரம் பெறலாம்.
அங்கு விண்ணப்பத்தைப் பெற்று, பூர்த்தி செய்து சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம்.
இந்த விண்ணப்பத்தை அஞ்சலக இணையதள முகவரியில் இருந்து, பதிவிறக்கம் செய்தும் இணையலாம்.
மேலும் படிக்க...
மாட்டுச் சாணத்தில் இருந்து குளியல் சோப், டீ - வியப்பூட்டும் விபரங்கள்!