வேளாண் துறையின் சாதனை, உற்பத்தியோடு நின்று விடாமல், அதன் பிந்தைய செயல்பாடுகளிலும் புரட்சி ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என, பிரதமர் மோடி (PM Modi) வலியுறுத்தியுள்ளார். நபார்டு (NABARD) எனப்படும் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியை நிறுவிய தினம், மும்பையில் உள்ள அதன் தலைமையகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
சாதனை
கொரோனா சவால்களுக்கு இடையிலும் விவசாயிகள் வேளாண் உற்பத்தியில் (Agri Production) சாதனை படைத்துள்ளனர். இந்த நிலையை அடைய, நாம் அயராது வேகமாக பணியாற்றி வருகிறோம். நீர்ப்பாசனம் முதல், விதை விதைப்பது, அறுவடை செய்வது, தொழில்நுட்பங்களை புகுத்தி விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பது என, ஒட்டுமொத்த தீர்வுகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். வேளாண் துறையில் உற்பத்தி அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப அறுவடைக்குப் (Harvest) பிந்தைய புரட்சியாக, விளைபொருட்களை பாதுகாப்பது, அவற்றின் மதிப்பை கூட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் தேவை.
முக்கியத்துவம்
இதற்காக வேளாண் துறையில் அறிவியல் சார்ந்த சூழலை உருவாக்கு வதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். கிராமப்புற மக்களின் ஆசைகளையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் ஊரக வளர்ச்சி நடவடிக்கை களை விரைவுபடுத்தி வருகிறோம். இளைஞர்களை ஊக்குவித்து, வேளாண் துறை சார்ந்த 'ஸ்டார்ட் அப் (Start Up)' திட்டங்களை மேம்படுத்துவதே, மத்திய அரசின் நோக்கம். 'தற்சார்பு இந்தியா' கொள்கைக்கு, கிராமப்புற பொருளாதாரம் சுயசார்புடன் இருக்க வேண்டியது அவசியம். அதற்கான வலுவான திட்டங்களை மத்திய அரசு கடந்த ஏழு ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.
மேலும் படிக்க
ஈரோட்டில் சூறாவளிக்காற்று மழையால் வாழைகள் சாய்ந்தன: இழப்பீடு வழங்க கோரிக்கை!
6 மாதத்திற்கு தொடர் லாபம் பெற மணத்தக்காளிக்கீரை