தவிர்க்க இயலாத இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ள சேமிப்பு பெரிதும் கைகொடுக்கும். இதனை நம்மில் பலருக்கு உணர்த்தியிருக்கிறது கொரோனா ஊடரங்கு.
அவ்வாறு சேமிக்கும் பணத்திற்கு, அதிக வட்டி எங்கு வழங்கப்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு, சேமிப்பது அதிக லாபத்தை ஈட்டித் தரும்.
அதிலும் தற்போதைய கொரோனா நெருக்கடி காலத்தைக் காரணம் காட்டி, வட்டியைக் குறைத்து பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது ரிசர்வ் வங்கி.
இதனால், ஃபிக்சட் டெபாசிட்(Fixed Deposit) எனப்படும் நிரந்திர வைப்புநிதியால், முதலீட்டாளர்களுக்கு பெரிய லாபத்தை தர இயலாது. குறிப்பாக இந்த நிரந்திர வைப்புநிதியில் இருந்து, கிடைக்கும் வட்டியை நம்பியுள்ள மூத்த குடிமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாதாந்திர வருமான திட்டம் (Monthly Income Scheme MIS)
இந்தத்திட்டத்தின் முக்கிய அம்சமே மாதமாதம் வட்டி கிடைக்கும். இதனால் உங்களுடைய மாதத்திர செலவுகளுக்கு இதனை நம்பியிருக்கலாம். இந்தத் திட்டத்திற்கு வழங்கப்பட்டுவந்த வட்டி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 6 .8 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதில் தனிநபர் அதிகபட்சமாக ரூ.4.5லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
ஜாயின்ட் அக்கவுண்டாக இருந்தால் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். முதிர்வுக்காலம் 5 ஆண்டுகள்.
தேசிய சேமிப்பு பத்திரம் (National Savings Certificate)
தேசிய சேமிப்பு பத்திரத்தை வாங்கி வைப்போருக்கு 6.8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. எவ்வளவு தொகை வேண்டுமானாலும், இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
முதலீடு செய்யும் தொகைக்கு வரி விலக்கும் உண்டு. முதிர்வுக்காலத்திற்குள் தேவைப்பட்டால், ஒருவர் பெயரில் இருந்து மற்றொருவரின் பெயருக்கும் பத்திரத்தை மாற்றிக்கொள்ளலாம்.
கிசான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra)
இந்தத்திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை 124 மாதங்கள் அதாவது 10 ஆண்டுகள் 4 மாதங்களில் இரட்டிபாகிறது. இதிலும் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். பத்திரத்தை பெயர் மாற்றமும் செய்துகொள்ளலாம்.
முதலீடு செய்த இரண்டரை ஆண்டுகளில் தேவைப்பட்டால், பத்திரத்தை ஒப்படைக்கும் வசதியும் உண்டு. இந்தத்திட்டத்தில் 6.9சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க...
ஒரே ப்ரிமியம் - ஆயுள் வரை ஓய்வூதியம்!
எளிமையான திட்டம், நிறைவான லாபம் - SBI சேவிங்ஸ் பிளஸ் திட்டம்!