நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 August, 2022 1:52 PM IST
Postponement of TNEA Counseling, Minister Ponmudi announced

தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பொறியியல் கல்வி பொதுபிரிவினருக்கான ஒற்றைச் சாளர கவுன்சிலிங் ஆகஸ்ட் 25-ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.

மருத்துவ சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு நாட்களுக்குப் பிறகு, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை குழு 2022 பொதுப் பிரிவினருக்கு கவுன்சிலிங் நடத்தும் என உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி ஆகஸ்ட் 24 அன்று அறிவித்தார்.

“நீட் தேர்வு முடிவுகளக்குப் பிறகு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளுக்கு இடம்பெயர்வதைத் தொடர்ந்து இடங்கள் காலியாக இருப்பதைத் தடுக்க, இந்த முடிவு அவசியம்”, என்று அவர் கூறினார்.

பல ஆண்டுகளாக, குறிப்பாக NEET அறிமுகத்திற்குப் பிறகு, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பல உயர்மட்டக் கல்லூரிகள் MBBS இல் இடங்கள் ஒதுக்கப்பட்ட பிறகு டஜன் கணக்கான மாணவர்கள் பொறியியலை விட்டு வெளியேறுவதைப் பார்க்கிறார்கள்.

பொறியியல் சேர்க்கை செயல்முறை நீண்ட செயல்முறை என்பதால் விண்ணப்பதாரர்களை இரண்டாவது சுற்று கவுன்சிலிங்கிற்கு அழைக்க முடியாது, ஆண்டுதோறும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் சேர்க்கைக்கு பதிவு செய்கின்றனர். இந்த ஆண்டு 1.58 லட்சம் மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் TNEA விண்ணப்பதாரர்களின் கட் ஆஃப் மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்கப்படும் தரவரிசைகளின்படி நான்கு சுற்றுகளாக கவுன்சிலிங்கை நடத்துகிறது. ஒவ்வொரு சுற்று முடிவதற்கும், ஒரு வாரம் ஆகும். மாணவர்கள் ஒதுக்கப்பட்ட கல்லூரியில் பதிவு செய்து கட்டணம் செலுத்த ஏழு நாட்கள் கூடுதலாக வழங்கப்படும்.

‘நீட் தேர்வு முடிவுகள் தாமதம்’

விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திரு.பொன்முடி நீர் தேர்வு முடிவுகள் தாமதமானதால், கவுனிசிலிங் அட்டவணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நீட் தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு நாட்களில் கவுன்சிலிங் தொடங்கும். முன்னதாக, பன்னிரண்டாம் வகுப்பு CBSE தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடங்களுக்கு விண்ணப்பிக்க காலக்கெடுவை அரசு நீட்டித்துள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாகும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம் ஆனால் அது தாமதமாகிவிட்டது. கடந்த ஆண்டு, நீர் தேர்வு முடிவுகள் தாமதமானதால், ஏராளமான மாணவர்கள் பொறியியல் இடங்களை ஒப்படைத்தனர். இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளில் பணியிடங்கள் காலியாகின. இதை உணர்ந்து, கவுன்சிலிங் பணியை ஆகஸ்ட் 25ம் தேதி வரை அரசு தாமதப்படுத்தியது, என்றார்.

மேலும் படிக்க:

அரசு பேருந்து ஊழியர்களுக்கு 4 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு!

நிலக்கடலையில் புகையிலை வெட்டுப்புழு தாக்குதலுக்கு எளிய தீர்வுகள்!

English Summary: Postponement of TNEA Counseling, Minister Ponmudi announced
Published on: 25 August 2022, 01:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now