சென்னை வேளச்சேரியின் மின் நிலையத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு செய்தார். அப்போது அவருடன் மின்வாரிய அதிகாரிகளும் இருந்தனர்.
ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் மழையின் அளவு அதிகமாக இருப்பதால் பிஎன்சி மில், கோடம்பாக்கம் ஆகிய இரண்டு துணை மின் நிலையங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னையை பொறுத்தவரை மொத்தம் 44 லட்சம் மின் பயனாளிகள் இருக்கிறார்கள். இவர்களில் 66,000 ஆயிரம் மின் பயனாளிகளின் வீடுகளில் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மழைநீர் அகற்றப்பட்ட பின்பு இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் செய்யப்படும்.
சென்னையில் மட்டும் களத்தில் 4,000 மின் ஊழியர்கள் பணியில் உள்ளனர். சென்னையை தவிர பிற 8 மாவட்டங்களில் 8,000 பணியாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
சில இடங்களில் சாலையின் மட்டமும், துணை மின்நிலைய மின்வாரிய பில்லர் பாக்சின் மட்டமும் ஒரே அளவாக நெருங்கியுள்ளது, 2 அடி மழைநீர் தேங்கினாலும் கூட பில்லர் பாக்ஸ் பாதிப்படையும் அபாயம் உள்ளது.
அடுத்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்திற்குள், பில்லர் பாக்சின் அளவு 1 அடி மேலும் உயரத்தப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
மேலும் படிக்க:
இன்று ரூ.1000 மலிவானது தங்கம்!
ரூ. 9,000 ஆக உயர்ந்த பருத்தி விலை! விவசாயிகளிடம் கெஞ்சும் வியாபாரிகள்!