வட சென்னை அனல்மின் நிலையத்தில் பராமரிப்பு, பழுது காரணமாக 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வடசென்னை அனல்மின் நிலையம் சென்னையில் இருந்து 25 கிலோமீட்டர் (16 மைல்) தொலைவில் அமைந்துள்ள மின் நிலையம் ஆகும். தமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கிய மின் நிலையங்களில் ஒன்றான இதன் மொத்த உற்பத்தி திறன் 1830 மெகாவாட் ஆகும். வடசென்னை அனல்மின் நிலையம் 1994 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் நிறுவப்பட்டது.
எண்ணூர் அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி இறக்குமதிக்கு பயன்பட்ட எண்ணூர் துறைமுகம் அருகில் இருந்ததே இந்த மின்நிலையம் இங்கு அமைக்கப்பட முக்கிய காரணம் ஆகும்.
மின் உற்பத்தி (Power generation)
வடசென்னை அனல்மின் நிலையம் துணை நுகர்வு மட்டுப்படுத்துதல் மற்றும் உற்பத்தி மேம்படுத்துதல் ஆகியனவற்றிற்கு பல விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையத்திற்கு தேவையான நிலக்கரி எண்ணூர் துறைமுகத்திலிருந்து கொண்டுவரப்படுகிறது. அண்மையில் இந்நிலையத்திற்கு ஒரு நிலையகம் கடல் வழியாக வாங்கி எடுத்து வரப்பட்டது. அண்மைக்காலங்களில் நிலக்கரி தட்டுப்பாட்டால் இந்நிலையத்தை இயக்க நிலக்கரி வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
தற்போது மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் உள்ள 3 அலகுகளில் தலா 210 விதம் 630 மெகாவாட், 2-வது யூனிட்டில் இரண்டு அலகுகளில் தலா 600 விதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், 2வது நிலையில் உள்ள 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல 2வது நிலையில் உள்ள இரண்டாவது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஒரே நேரத்தில் பராமரிப்பு மற்றும் பழுது காரணமாக 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பாதிப்பையும் மற்றும் இரண்டாவது அலகில் மேற்கொள்ளப்படும் ஆண்டு பராமரிப்பு பணிகளையும் சரிபார்க்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க
அதிகரிக்கும் கொரோனா தொற்று: தயார் நிலையில் சுகாதாரத்துறை
கல்லூரி மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டம்: சென்னை பல்கலைக்கழம் அறிவிப்பு!