இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 3 March, 2022 2:48 PM IST
Power to the people to prevent the opening of Tasmac stores

புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை தடுக்க மக்களுக்கு அதிகாரம் அளித்து தமிழ்நாடு அரசு சட்டத்திருத்தம் செய்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகளின் அருகில் மதுபானக் கடைகள் திறக்கக்கூடாது. ஆனால் அத்தகைய இடங்களில் சில ஊர்களில் கடைகள் அமைக்கப்படுகின்றன. இதை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். இதனையடுத்து சில நாள்கள் கடைகள் அடைக்கப்பட்டு பின்னர் மீண்டும் அதே இடத்தில் கடைகள் திறக்கப்படுகின்றன.

சட்டத் திருத்தம் (New legislation)

இந்நிலையில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை தடுக்க மக்களுக்கு அதிகாரம் அளித்து தமிழ்நாடு அரசு சட்டத்திருத்தம் செய்துள்ளது. இதன்படி மக்கள் தெரிவிக்கக் கூடிய ஆட்சேபங்களைப் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்காமல், எந்த டாஸ்மாக் கடைகளையும் திறக்க அனுமதி வழங்க கூடாது என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அது குறித்து மாவட்ட கலெக்டர்கள் கண்டிப்பாக பரீசிலிக்க வேண்டும் என்றும், மக்கள் எதிர்ப்பை மீறி கடைகள் திறக்க அனுமதியளித்தால் 30 நாள்களுக்குள் கலெக்டர் முடிவை எதிர்த்து மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்ய சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதிய டாஸ்மாக் கடைகளை திறக்கப்படுவதை தடுக்க மக்களுக்கு அதிகாரம் அளித்து சட்டதிருத்தம் செய்துள்ளது தமிழக அரசு. இதன் அடிப்படையில் பொதுமக்கள் புதிய டாஸ்மாக் திறப்பு குறித்து புகார் அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, டாஸ்மாக் திறப்பு தடுத்து நிறுத்தப்படும்.

மேலும் படிக்க

கேன் குடிநீரின் தரம் எப்படி இருக்க வேண்டும்: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

70 நாய்களுக்கு போதைப் பொருளை கண்டறியும் சிறப்பு பயிற்சி!

English Summary: Power to the people to prevent the opening of Tasmac stores: New legislation!
Published on: 03 March 2022, 02:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now