News

Sunday, 03 July 2022 07:58 PM , by: Elavarse Sivakumar

குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராமேஷ் ரிசர்வ் வங்கியில் கடன் கேட்டிருப்பது, அதிகாரிகளை அச்சத்தில் உறைவைத்துள்ளது. அதேநேரத்தில், மற்றவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்-தின் பதவி காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு போட்டியிட்ட ஒரு வேட்பாளரின் செயல் மற்றவர்களுக்கு வியப்பையும், வேடிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

வேட்புமனு தாக்கல்

நாமக்கல் மாவட்டம் மேற்கு பாலப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காந்தியை போல் உடை அணியும் வழக்கம் கொண்டவர். இவர் எந்த தேர்தல் வந்தாலும் முதல் ஆளாய் வேட்புமனு தாக்கல் செய்து நூதனமான பிரச்சாரத்தை மேற்கொள்வார்.

கடன் கேட்டு விண்ணப்பம்

அதன்படி எதிர்வரும் குடியரசு தலைவர் தேர்தலிலும் முதல் ஆளாய் காந்தி ரமேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ள தமக்கு 4 ஆயிரத்து 809 கோடி ரூபாய் கடனாக கேட்டு சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கியில் விண்ணப்பம் செய்துள்ளார்.

இந்த பணத்தை கொண்டு குடியரசு தலைவராக தன்னை தேர்ந்தெடுக்க உள்ள பிரதமர், எம்.பி மற்றும் எம்.எல்.ஏ என மொத்தம் 4 ஆயிரத்து 809 பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் வீதம் வழங்க உள்ளதாகவும் அதற்காக தன்னுடைய பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு ஆகியவற்றை வைத்து 4,809  கோடி ரூபாய் வட்டியில்லா கடனாகவோ அல்லது மானியமாக வழங்க வேண்டும் என தெரிவித்து ரிசர்வ் வங்கியில் மனு அளித்துள்ளார்.

ஆலோசனை

இவரின் மனுவை பார்த்த வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மனுவை பெற்று கொண்டு உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

மரத்தடி வைத்தியரிடம் சிகிச்சை எடுத்துவரும் தோனி!

ஆடிப்பட்டத்தில் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு- TNAU கணிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)