
தமிழகத்தில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.41 ஆயிரத்தை நெருங்கிய நிலையில், ஒரு கிராம் தங்கம் ரூ.5,100யைத் தாண்டிவிட்டது. இந்தக் கிடுகிடு விலை உயர்வு இலத்தரசிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
சர்வதேச பங்குச்சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றம்-இறக்கம் காணப்படுகிறது. தற்போது ரஷியா- உக்ரைன் இடையேயான போர் தொடர்வதால், பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்களின், தங்கள் பணத்திற்குப் பாதுகாப்புக் கருதி, தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாகவேத் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாகத் தமிழகத்திலும் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்த ஆபரணத் தங்கம் நேற்று ஒரு கிராம் ரூ.5,056க்கும், ஒரு சவரன் ரூ.40,448க்கும் விற்பனையானது.
இதன் தொடர்ச்சியாக இன்றும் சவரனுக்கு ரூ. 392 அதிரடியாக உயர்ந்து , ரூ.40,840 ரூபாய்க்கு ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் ரூ.5,105க்கு விற்பனையாகிறது.
திருமண சீசன் துவங்கியுள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்து வருவது, திருமணம் நடத்த உள்ளவர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ரஷியா-உக்ரைன் இடையேயான போர் காரணமாக, பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. இதன் காரணமாக தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரக்கூடும் என்று வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலையை பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நடுத்தர மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சேமித்து தங்கம் வாங்கும் நிலை உள்ளது. தற்போது தங்கம் மேலும் விலையேறினால், நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனி போன்று ஆகிவிடும். காய்கறி விலை ஏறினாலும், தங்கம் விலை ஏறினாலும் அது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தியாகவே அமைகிறது.
மேலும் படிக்க...
குழாய் பாசனத்திற்கு ரூ.15,000 மானியம்- ஆதிதிராவிட விவசாயிகளுக்கு அழைப்பு
பொதுத் தேர்விற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு- மாணவர்களுக்கு Happy news!