இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தாதா சாகேப் பால்கே விருது (Dada Saheb Phalke Award)
இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனை செய்தவர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசால் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது இந்தியத் திரைப்படத்துறையின் தந்தை என்று கருதப்படும் தாதா சாகேப் பால்கே பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1969-ம் ஆண்டு அவரது பிறந்த நாள் நூற்றாண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
மிக உயரிய விருது (The highest award)
இந்தியத் திரைத்துறையில் சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரிய விருதாக இந்த விருது கருதப்படுகிறது.
இந்த விருது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த பல்வேறு திரை பிரபலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் சிகரம் என்று அழைக்கப்பட்ட இயக்குநர் பாலச்சந்தர் ஆகிய 2 பேர் மட்டுமே இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
மத்திய அரசு அறிவிப்பு (Federal Government Announced)
இந்த நிலையில் 2020-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்குவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
2-வது நடிகர் (2nd actor)
இதன் மூலம் தமிழகத்தில் இருந்து இந்த உயரிய விருதைப் பெறும் 2-வது நடிகர் என்ற பெருமையை ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.
திரைத்துறையில் இந்திய அளவில் சாதனைப் புரிந்த நபர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆங்கில மற்றும் வங்க மொழி படங்களில் நடித்துள்ளார்.
பல விருதுகள் (Many awards)
முன்னதாக 2014-ம் ஆண்டு பத்மபூஷண், 2016-ம் ஆண்டு பத்மவிபூஷண் ஆகிய விருதுகளையும் மத்திய அரசு ரஜினிகாந்துக்கு வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
51வது தாதாசாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
மோடி வாழ்த்து
ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தலைவருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி உள்ளார். வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கடின உழைப்பால் உயர்ந்த ரஜினி, பல தலைமுறைகளிடம் பிரபலமானவர் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க...
கோடை மற்றும் மானாவாரிக்கு ஏற்ற பருத்தி ரகங்கள் எவை?
விவசாயிகள் தங்கள் விவசாயத்தோடு தேனீ வளர்ப்பிலும் ஈடுபட வேண்டும் - மோடி உரை!!
பூக்காதச் செடிகளையும் பூக்கவைக்கும், ஆரஞ்சு தோல் பூச்சிக்கொல்லி!