தீபாவளி பண்டிகைக்கு, உள்ளூர் வியாபாரிகள் (Local merchants) தயாரித்த பொருட்களை வாங்கி, அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இதன் வாயிலாக, பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என, பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) வேண்டுகோள் விடுத்தார்.
விவசாயிகளுக்கு உதவும் ஸ்வமித்வா திட்டம்:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள, 'ஸ்வமித்வா' (Swamitva) திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு, சொத்து அட்டை வழங்கப்படும். வங்கிக் கடன் பெறுவதற்கு மட்டுமின்றி, விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இந்த திட்டம் உதவும். வேளாண் சீர்திருத்த சட்டங்கள் வாயிலாக, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை, நேரடியாக சந்தையில் விற்பனை செய்ய வழி கிடைத்துள்ளது. இடைத்தரகர்கள் (Intermediaries) என்ற நடைமுறை ஒழிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் வியாபாரிகளை ஆதரிப்போம்:
தீபாவளி பண்டிகைக்காக, மக்கள் பொருட்கள் வாங்குவதில், தற்போது ஆர்வமாக இருப்பர். உள்ளூர் வியாபாரிகள் தயாரித்த பொருட்களை வாங்கி, அவர்களை ஊக்கப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும். உள்ளூர் வியாபாரிகளை ஊக்குவிக்க வேண்டும் என்றதும், வெறும் அகல் விளக்குகளை (Akal lights) அவர்களிடம் வாங்குவதோடு நிறுத்திவிட கூடாது. தீபாவளிக்காக நீங்கள் வாங்கும் அனைத்து பொருட்களையுமே, உள்ளூர் வியாபாரிகளிடம் இருந்து வாங்க வேண்டும். இது பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த பேருதவியாக இருக்கும். வாரணாசி மக்களுக்கு மட்டுமின்றி, நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த கோரிக்கையை விடுக்கிறேன் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மக்களின் அலைச்சலைத் தவிர்க்க, நடமாடும் இ-சேவை மையம்!
வெங்காயம், உருளைக்கிழங்கைத் தொடர்ந்து சமையல் எண்ணெயின் விலை உயர்வு!
கடலூரில் உணவு பூங்கா அமைக்க ஏற்பாடு! முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!