News

Thursday, 06 June 2019 12:30 PM

பிரதமர் மோடி தலைமை ஏற்ற பின்பு பல்வேறு இலாக்காக்கள் அமைக்க பட்டு அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர். தற்போது மீண்டும் இரண்டு புதிய குழுக்களை அமைத்துள்ளது. நிலவி வரும் பொருளாதார  சரிவினை சீர் செய்யவும்,  வேலையின்மை சரி  செய்யவும் புதிய குழுக்களில் உள்ள அமைச்சர்கள் பணி புரிவார்கள்.

பொருளாதார வளர்ச்சி மற்றும்  முதலீடு

நாட்டின்  பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் சற்று குறைவாகவே உள்ளது.  கடந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.2% மாக இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால் ஒவ்வொரு காலாண்டு இறுதியிலும் வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருந்துள்ளது. தற்போது உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி  விகிதம் 6.3% ஆக  உள்ளது.

வளர்த்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா நெடுங்காலமாக இருந்து வருகிறது. தற்போதுள்ள வளர்ச்சி விகித சரிவால் சீனாவிற்கு அடுத்த இடத்திற்கு தள்ளபட்டு இருக்கிறோம். ஏனெனில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.4% ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவுடன் ஒப்பிடுகையில் 0.1% கூடுதலாக உள்ளது.

வேலையின்மை

தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் ( National Sample Survey Organisation ) நடத்திய கால வேலைப்படை ஆய்வு ( Periodic Labour Force Survey - PLFS ) முடிவுகளை வெளியிட்டது. இதன் படி கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு  வேலையின்மை 6.1% அதிகரித்துள்ளது.

பொருளாதார சரிவு மற்றும் வேலையின்மை இவ்விரு சவால்களை எதிர்கொள்ள பிரதமர் தலைமையிலான அரசு புதிய இரண்டு குழுக்களை அமைத்துள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள் பலர் இடம் பெற்றுள்ளனர்.  

பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டை அதிகரிக்கும் பொருட்டு  5 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சாலை மற்றும் சிறுகுறு நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வேலையின்மை போக்கவும், புதிய வேலைவாய்ப்பினை உருவாக்கவும் திறன்மேம்பாட்டை உயர்த்துவதற்காகவும் 10 அமைச்சர்கள் கொண்ட மற்றொரு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இக்குழுவில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ்கோயல், நரேந்திர சிங் தோமர், ரமேஷ் பொக்ரியால், தர்மேந்திர பிரதான், மகேந்திரநாத் பாண்டே, சந்தோஷ் குமார் கங்வார், ஹர்தீப்சிங் புரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவ்விரு குழுக்களும் பிரதமர் மோடி தலைமையில் செயல் படும்.

இவ்விரு குழுக்களில் எடுக்க படும் முடிவுகள் வரும் நிதி பட்ஜெட்டில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

Anitha Jegadeesan

Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)