மறைந்த பாஜக தலைவர் விஜயராஜே சிந்தியாவின் 100 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு பெருமிதப்படுத்தியுள்ளார்.
ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவரான விஜயராஜே சிந்தியாவின் 100-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1919ம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி பிறந்த விஜயராஜே சிந்தியா 2001ம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி மறைந்தார்.
நாணயம் வெளியீடு
இன்று, விஜயராஜே சிந்தியாவின் 100-வது பிறந்த தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் கானொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய பாஜக தலைவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் போது விஜயராஜே சிந்தியாவின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
பிரதமர் மோடி உரை
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வியஜராஜே சிந்தியாவின் அனுபவங்களை நினைவுகூர்ந்தார். கடந்த 60 ஆண்டுகளில், முக்கிய அரசியல் நபர்களில் ஒருவர். அவர் ஒரு தீர்க்கமான தலைவர், திறமையான நிர்வாகி. சுதந்திரத்திற்கு முன்னர் வெளிநாட்டு ஆடைகளை புறக்கணித்ததால் இருந்து ராம் மந்திர் அந்தோலன் வரை அவரது அனுபவம் மிகப்பெரியது.
ராம ஜென்மபூமக்காக அவர் போராடியுள்ளார். அவரது நூறாவது பிறந்தநாளில் அவரது கனவும் நனவாகியுள்ளது. அதிகாரத்தை கைப்பற்றுவதைவிட பொது சேவை முக்கியமானது என்பதை நிரூபித்தவர். தனது வாழ்க்கையின் முக்கியமான ஆண்டுகளை சிறையில் கழித்தார். வருங்கால சந்ததியினருக்காக, அவர் பல தியாகங்களைச் செய்துள்ளார். பதவி அல்லது புகழுக்காக, அவர் ஒருபோதும் அரசியல் அதிகாரத்தை தேர்வு செய்யவில்லை என்று புகழாரம் சூட்டினார்.
விஜயராஜே சிந்தியாவின் மகள் தான், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே என்பதும், தற்போதைய பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா அவரது பேரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க..
இந்தியாவில் முதல் முறையாக கேரள மாநிலத்தில் விவசாயிகள் நல நிதி வாரியம் அமைப்பு!
பி.எம் கிசான் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 42,000 கிடைக்கும்
தரமான விதைகள் மூலம் அதிக மகசூல் பெறலாம் - விவசாயிகளுக்கு விதை பரிசோதனை அலுவலர் அறிவுரை