பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு வருகிற 25ம் தேதி ரூ.2000 விடுவிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பி.எம் கிசான் திட்டம் - PM-Kisan scheme
பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் (Pradhan Mantri Kisan Samman Nidhi yojana)திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 என மூன்று தவணைகளில் தலா ரூ.2000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 6 தவணைகள் முடிந்த நிலையில், மத்திய அரசு தனது 7- வது தவணையை இந்த மாதம் வழங்கவுள்ளது.
டிசம்பர் 10 முதல் 15 தேதிக்குள் இந்த தவணை கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பாத்த நிலையில் அதற்கான அறிவிப்பு வருவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது . இந்நிலையில் பி.எம் கிசானின் 7வது தவணை எப்போது கிடைக்கும் என்ற அதிகாரப்பூர்வ தகவலை மோடி அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் விவசாயிகளிடையே உறையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த டிசம்பர் 25 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய பிரதமர் மோடி, மறைந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாள் ஆண்டு விழாவில் பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் (PM Kisan Samman Nidhi Yojana)அடுத்த தவணை வழங்குவதாக கூறினார். இதன் பொருள் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி விவசாயிகளுக்கான 7 வது தவணை விடுவிக்கப்படும் என்பது தான்.
உங்கள் பெயர் மற்றும் கட்டண நிலையை சரிபார்க்க
பட்டியல், விண்ணப்பம் மற்றும் கட்டண நிலைகளில் உங்கள் பெயரைச் சரிபார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்
முதலில், பிரதமர் கிசான் சம்மன் நிதியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள் - https://pmkisan.gov.in/.
-
"Dashboard" என்று சொல்லும் இணைப்பைக் கிளிக் செய்க.
-
நீங்கள் அதைக் கிளிக் செய்யும் போது, ஒரு புதிய பக்கம் திறக்கும்.
-
இங்கே நீங்கள் மாநில, மாவட்டம், துணை மாவட்டம் மற்றும் கிராமத்தை நிரப்ப வேண்டும்.
-
பின்னர் "Show" என்பதை கிளிக் செய்க
-
இதன் பின் உங்கள் கிராமத்தில் எத்தனை விவசாயிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர், எத்தனை தவணைகளைப் பெறுகிறார்கள் அல்லது யாருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது போன்ற அனைத்து தகவல்களையும் நீங்கள் பெறுவீர்கள்.
கட்டண நிலையை நீங்கள் காண விரும்பினால், Payment Status. என்பதைக் கிளிக் செய்க, இங்கே நீங்கள் முழுமையான பட்டியலைப் பெறுவீர்கள்.
நேரடியாக பட்டியலை சரிபார்க்க..இங்கே கிளிக் செய்யவும்
FTO is Generated and Payment confirmation is pending என்றால் என்ன?
பிரதமர் கிசான் இணையதளத்தில் உங்கள் நிலையைச் சரிபார்க்கும்போது FTO is Generated and Payment confirmation is pending என்று ஒரு செய்தியைக் கண்டால், இதன் பொருள் விவசாயிகள் கொடுத்த விவரங்களை மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது, பணம் விரைவில் உங்கள் கணக்கில் மாற்றப்படும். FTO என்றால் Fund Transfer Order என்று அர்த்தம்.
மாட்டுச் சாணம் மூலம் "பெயிண்ட்" தயாரிப்பு - கால்நடை விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம்!!