உலகத்தலைவர்களில் பிரபலமானவர் யார் என்பது குறித்து ஆய்வில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மற்றத் தலைவர்களைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. பல்வேறு நாட்டு மக்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், மோடிக்கு 71 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
71 % பேர் ஆதரவு (71% support)
உலகம் முழுவதும் உள்ள தலைவர்களின் செல்வாக்கு , புகழ் தொடர்பாக தி மார்னிங் கன்சல்ட்' என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. பல்வேறு நாட்டு மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வு முடிவுகளின்படி, பிரதமர் மோடி பிரபலமான தலைவராக தேர்வாகி உள்ளார். அவரை, 71 சதவீதம் பேர் ஆதரித்து உள்ளனர்.
பிறத் தலைவர்கள் (Other leaders)
முன்னதாகக் கடந்தாண்டு செப்டம்பரில் நடந்த ஆய்வில் பிரதமர் மோடி தேர்வானார். மோடியை 70 சதவீத பேர் ஆதரித்தனர். இந்தாண்டும் மோடி 71 சதவீதம் ஆதரவு பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
மோடிக்கு அடுத்த படியாக, 66 % ஆதரவுடன், மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் லோபஸ் 2ம் இடம் பிடித்துள்ளார். உலக வல்லரசான அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் 3ம் இடத்தில் உள்ளார். அவருக்கு 46 % மட்டுமே ஆதரவு கிடைத்துள்ளது.
விவரம்:
பிரதமர் நரேந்திர மோடி : 71 %
மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் லோபஸ் : 66 %
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் : 46 %
பிரேசில் அதிபர் போல்ஸ்சோனோரோ : 37 %
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்: 26 %
உலக நாடுகளைப் பொருத்தவரை, இந்தியர்கள் மீதும், இந்தியத் தலைவர்கள் மீது ஒருவித அன்பும், பாசமும் இருப்பது உண்மையே.
மேலும் படிக்க...
கிசான் கால்சேன்டர், விவசாயம் தொடர்பான சந்தேகங்களை தீர்க்க! முயற்சி
Hero Electric bikes:கூட்டணியில் இணைகிறது முன்னணி நிறுவனங்கள்! எவை?