ஒவ்வொரு வருடமும், பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது யார் யாருக்கு கிடைத்தது என்ற பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. பட்டியல் விவரத்தை கீழே காணுங்கள்.
2022 வெற்றியாளர்களின் பட்டியல் - 24 ஜனவரி 2022 ஆன இன்று வெளியாகியுள்ளது, 29 குழந்தைகளில் 15 மாணாக்கள் மற்றும் 14 மாணவிகள் இடம் பெற்றுள்ளனர்.
எந்த பிரிவில் எத்தனை விருதுகள் (How many awards in which category)
புதுமை (7), சமூக சேவை (4), அறிவு (1), விளையாட்டு (8), கலை (6) மற்றும் வீரம் (3) ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட எண்கள்வாறு, அவர்களின் சிறப்பான சாதனைகளுக்காக பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் 2022 வழங்கப்பட்டது.
பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் 2022 விருதுடன் ரூ. 1 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்பட்டது.
இதில் தமிழ்நாட்டில் இருந்து என். சி. விஷாலினி மற்றும் அஷ்வதா பிஜு ஆகிய இருவரும் புதுமை பிரிவில் விருதையும், பரிசு தொகையையும் தட்டிச் சென்றனர்.
மேலும் பிற மாநிலங்களில் இருந்து, அதாவது, ராஜஸ்தானிலிருந்து (1), கர்நாடகாவிலிருந்து (2), கேரளாவிலிருந்து (1), மனிப்பூரிலிருந்து (1), ஆசாமிலிருந்து (1), ஆந்திராவிலிருந்து (1), மகாராஷ்டிராவிலிருந்து (3), பிகாரிலிருந்து (2), உத்தரா கன்டிலிருந்து (1), திரிபுராவிலிருந்து (1), ஒடிசாவிலிருந்து (1), ஹரியானாவிலிருந்து (2), மத்திய பிரதேசத்திலிருந்து (1), பஞ்சாபிலிருந்து (1), உத்தர பிரதேசத்திலிருந்து (3), ஜம்மு காஷ்மீரிலிருந்து (1), ஹிமாச்சல பிரதேசத்திலிருந்து (1), தெலுங்கானா (1), சண்டிகாரிலிருந்து (1) மற்றும் குஜாராத்திலிருந்து (1) என 29 பரிசுகளை நாடு முழுவதிலுமிருந்து மாணவர்களின் திறமையை கண்டறிந்து வழங்கினர்.
மொத்தம் ஆறு பிரிவுகளில் சிறந்து மாணவர்களுக்கு இந்த பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
மேலும் படிக்க: