News

Friday, 26 July 2019 11:16 AM

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்தார்.

இன்று நடைபெற உள்ள கிண்டி வேலைவாய்ப்பு முகாமினை சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து நடத்துகின்றன. கிண்டி தொழிற்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடை பெறுகிறது.  

8 ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறும்படி கேட்டு கொள்ள படிக்கிறார்கள். அதே போன்று தொழில் நுட்பம் படித்தவர்களும் பங்கு பெறலாம் என அறிவிக்க பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளும் இதில் கலந்து கொண்டு விருப்பமான பணியினை தேர்வு செய்யும்படி கேட்டு கொள்கிறார்கள்.

பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது. இதில் தனியார் வங்கி நிறுவனங்களான  ஐ.சி.ஐ.சி.ஐ, சிட்டி பைனான்சியல், ஆம்ரோ வங்கி, ரிலையன்ஸ் மொபைல், ஹச், ஏ.பி.என்,  ஏ.ஐ.ஜி. ஆகிய நிறுவனத்தினர் கலந்துகொண்டு பல்வேறு பணி பிரிவுகளுக்கு தகவல் தொடர்பு மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்றவற்றிற்கு பணி ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

வேலைவாய்ப்பில் பங்கு பெறும் நிறுவனங்கள் முழுமையான காலி பணியிட விவரம் குறித்து தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளது.  இந்த வாய்ப்பினை வேலை தேடுபவர்கள், வேலை மாற்றத்தை நாடுவோர்கள் என அனைத்து தரப்பினரும் பயன் படுத்தும் படி கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)