அருப்புக்கோட்டையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மதுரை வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இளங்கலை இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள், கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின்கீழ் அருப்புக்கோட்டை வட்டாரத்திலுள்ள கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மூன்று மாதங்கள் தங்கி களப் பயிற்சி (Field Training) மேற்கொள்கின்றனர். இந்த கால கட்டத்தில், விவசாயிகளுக்கு பல்வேறு விவசாய நுணுக்கங்களை பயிற்சியாக அளித்து வருகின்றனர்.
மகசூல் அதிகரிக்கும் முறை
மானாவாரி சாகுபடியில் மழை குறைபாட்டினால் விதை முளைக்கும் தருணத்திலோ அல்லது பயிர் வளரும் நிலையில், வறட்சி ஏற்பட்டு கருகும் நிலை வருகிறது. இதை தவிர்த்து மகசூல் (Yield) அதிகரிக்கும் முறைகள் குறித்தும், வறட்சியை தாங்கி வளர சீமை கருவேல் இலையில் விதை கடினப்படுத்துதல் முறைகள் குறித்தும், மாணவிகள் விமலா, வினிதா, அங்கயற்கண்ணி, காயத்ரி, ஹர்ஷிதா, கார்த்திகா ஆகியோர் விவசாயிகளுக்கு தெளிவான செயல்முறை விளக்கத்தை (Process description) அளித்தனர்.
வேளாண் துறை வழங்கிய இப்பயிற்சி, விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. வேளாண் துறையும், வேளாண் துறை மாணவர்களும் பயிர்களின் மகசூலை அதிகரிக்க, பல பயிற்சிகளை விவசாயிகளுக்கு அளித்து வருகிறது. விவசாயிகளும் ஆர்வத்துடன் வேளாண் துறை நடத்தும் பயிற்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வாசனை எண்ணெய்கள்!
இன்னும் நான்கு நாட்களுக்கு மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!