உணவு சார்ந்த தொழில்களுக்கு என்றுமே வரவேற்பு உண்டு. அதிலும் தரத்திற்கு எந்த விதத்திலும் ஈடு இல்லாதவகையில் சுவையைக் கொடுத்துவிட்டால், நாக்குக்கு அடிமையான வாடிக்கையாளர்கள் என்றுமே நம்பக்கம்தான்.
நாக்கு ருசியைப் பயன்படுத்தி நாமும் கணிசமாக லாபம் பார்க்கலாம். ஆம் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கவிருப்பது, விவசாயத்தில் ஆதரவு தொழிலாகக் கருதப்படும் கால்நடை வளர்ப்பை உள்ளடக்கியது.
உண்மையில் அதிக லாபம் தரும் தொழில்களில் கால்நடை வளர்ப்பும் ஒன்று.
இந்த தொழிலைத் தொடங்க அரசு பல்வேறு சலுகைகளையும் கடனுதவிகளையும் வாரி வழங்குகிறது. இதற்கு மிகப்பெரிய அளவில் மூலதனமும் தேவையில்லை.
முதலீடு (Investment)
தொழிலின் திட்டமதிப்பு அறிக்கையை அளித்தால், பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் 16 லட்சம் முதல் 50 லட்சம் வரை கடனுதவி கிடைக்கும். திட்டமதிப்பில் 30 சதவீதத்தை நீங்கள் கையில் வைத்திருக்கும் பட்சத்தில் எஞ்சிய 70 சதவீதம் அதாவது 7.5 லட்சம் வரை வங்கிக்கடன் வழங்கப்படும்.
இதனைக் கொண்டு சிறிய அளவில் மாட்டுப்பண்ணை அமைத்து, அதில் இருந்து சுத்தமான பால், தயில், மோர், வெண்ணெய், நெய் ஆகியவற்றை அக்மார்க் தரத்துடன் விற்பனை செய்யலாம். அத்துடன் பால்கோவா, கோவா, ரசகுல்லா, மில்க் பேடா (Milk Peda) உள்ளிட்ட மில்க் ஸ்வீட்களையும் விற்பனை செய்யலாம்.
பால் இனிப்புகளுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கும். அதிலும் பசும்பால் பொருட்கள் என்றால் விற்பனையும் களைகட்டும. இதனை வியாபாரமாக்கி நல்ல லாபமும் ஈட்டலாம்.
மூலப்பொருட்கள் (Raw Mateirals)
இந்த வியாபாரத்திற்கு ஒருமாதத்திற்கு 12, 500 லிட்டர் பால் தேவைப்படும். அத்துடன் ஆயிரம் கிலோ சர்க்கரை, மற்றும் இனிப்பு செய்யத் தேவைப்படும் மற்ற பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு மாதத்திற்கு 4 லட்சம் வரை செலவு செய்ய வேண்டி வரும்.
இடம் (Space)
பால்பொருட்கள் தயாரிப்பு கூடம் அமைக்க ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள இடம் தேவைப்படும். இதில் 500 சதுர பாலை பதப்படுத்தும் பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். மற்றவை, அலுவலகம் உள்ளிட்ட பிற தேவைகளுக்கு பிரித்துக்கொள்ளலாம்.
லாபம் (Profit)
இந்த தொழிலுக்கு ஆண்டுக்கு 48 லட்சம் செலவு செய்யும் பட்சத்தில் குறைந்த பட்சம் 5 லட்சம் முதல் 7 லட்சம் வரை லாபம் ஈட்டலாம்.
மேலும் படிக்க...
PM-Kissan முறைகேடு - 130 கோடி பறிமுதல்!
2 ஆயிரத்திற்கு ரூ.2 ஆயிரம் - படைப்புழுத்தாக்குதலால் கவலையில் விவசாயிகள்!