
தேசிய விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மத்திய நிதியுதவி அம்சங்களில் ஒன்றான வேளாண் இயந்திரமயமாக்கல் துணைத் திட்டம் மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், அறுவடைக்குப் பிந்தைய பணிகளுக்காக தொழில்நுட்பங்கள் உட்பட பல்வேறு விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தனிப்பட்ட உரிமையின் அடிப்படையில் விவசாயிகள் வாங்குவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்ப வாடகை அடிப்படையில் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்காக வாடகை மையங்கள், கிராம அளவிலான பண்ணை இயந்திர வங்கிகளை அமைப்பதற்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. விவசாய நிலங்களில் ட்ரோன்களை பயன்படுத்துதல் மற்றும் வாங்குதல் உள்ளிட்ட சேவைகளை வழங்குவதற்காக விவசாய ட்ரோன் வாடகை மையங்களை அமைக்கவும் நிதியுதவி வழங்கப்படுகிறது.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வாழ்வாதார உதவியை வழங்கும் நோக்கில், 3 ஆண்டுகளுக்கு (2023-24 முதல் 2025-26 வரை) 15,000 ட்ரோன்களை வழங்குவதற்காக ட்ரோன் சகோதரி திட்டத்தை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.
2024 செப்டம்பரில் ரூ.2817 கோடி ஒதுக்கீட்டில் டிஜிட்டல் வேளாண் இயக்கத்தைச் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் தொடர்பான தகவல்களை சரியான நேரத்தில் மற்றும் நம்பகமான முறையில் கிடைக்கச் செய்வதற்கும் வலுவான டிஜிட்டல் விவசாய சுற்றுச்சூழல் அமைப்பை செயல்படுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.
மாநிலங்களவையில் கேள்வி ஓன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Read more:
வேளாண் வளர்ச்சியை முதன்மை நோக்கமாக கொண்டு சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்: அன்புமணி
மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள்