டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான சட்டத்திற்கான விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஹைட்ரா கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களினால் வேளாண் நிலங்கள் நாசமாவதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு ஏதுவாக காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு விவசாய சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தக் கோரிக்கை வலுப்பெற்றதால், காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கும் சட்டமுன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு அனைத்துத் தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த சட்ட முன்வடிவில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக விவசாய சங்கங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பான விதிமுறைகளை தமிழ்நாடு அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது.அதில்,
-
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குட்பட்ட நிலங்களை விவசாயப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் .
-
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாகுபடி பணிகளை மேற்கொள்ளலாம்
-
அதிக விளைச்சலைக் காணும் பொருட்டு, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும்.
-
வேளாண் தொழில்கள் தொடர்பான தொழிலகங்களை தொடங்க மட்டுமே அனுமதிக்கப்படும் என விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளது.
-
மேலும், வேளாண் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள விதிகள் அனுமதிக்கப்படும்
இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
அரசின் இலவச மாட்டுக்கொட்டகைத் திட்டம்! தெரியுமா உங்களுக்கு!
பயன்களை அள்ளித்தரும் திரவ உயிர் உரங்கள்- விவசாயிகள் கவனத்திற்கு!