News

Friday, 14 October 2022 07:50 PM , by: T. Vigneshwaran

Hindi imposition protest

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம் நடைபெறும் என தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

முன்னதாக மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் புதிய கல்விக்கொள்கை மூலம் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக மத்திய அரசு மீது தமிழகம், கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் குற்றம்சாட்டியதோடு இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம் நடைபெறும் என தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெறும். மீண்டும் வரலாறு திரும்பாமல் இருக்கும் சூழல் ஏற்பட வேண்டும்.

இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம், இந்தி மொழியை அல்ல. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பேராசிரியர்களுக்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்ட விவகாரத்தில் ரூ.23.20 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதது. நிரந்தர பேராசிரியர்கள்,கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் நடைமுறை விரைவில் தொடங்கும். உரிய தகுதி பெற்றவர்களே பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க

100 யூனிட் இலவச மின்சாரதிற்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)