மத்திய குழுவினரின் ஆய்வைத் தொடர்ந்து, பயிர் சேத்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ரூ.1,147 கோடி இடுபொருள் நிவாரண இழப்பீடாக வழங்ப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ 568 கோடி வழங்கும் பணி முழுவீச்சல் நடைபெற்று வருகிறது.
மழையால் பயிர் சேதம்
தமிழகத்தில் கரையைக் கடந்த நிவர் மற்றும் புரெவி புயல்களைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறிய கனமழை கொட்டித்தீர்த்தது. நிவர் புயலால், 41,192 ஏக்கர், புரெவி புயலால், 7.25 லட்சம் ஏக்கர், பருவம் தவறி பெய்த மழையால், 16.8 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்தன.இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மத்திய குழு ஆய்வும் - இழப்பீடும்
இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று மத்திய குழுவினர் இரண்டு முறை தமிழகம் வந்து, பயிர் சேதங்கள் குறித்து ஆய்வு செய்து மத்திய -மாநில அரசுகளுக்கு அறிக்கைகளை சமர்பித்தனர். இதை தொடர்ந்து, பயிர் பாதித்த விவசாயிகளுக்கு, இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, 2.5 ஏக்கர் வரை மட்டுமே, நிவாரணம் வழங்கப்பட்டது. தமிழக வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, இயக்குனர் தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலைத் துறை இயக்குனர் சுப்பையன் எடுத்த முயற்சியின் காரணமாக, பயிர் இழப்பீடு உச்சவரம்பு தளர்த்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பயிர் முழுமைக்கும் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது.
-
நிவர் புயல் நிவாரணமாக, 32.5 கோடி ரூபாய்
-
புரெவி புயலுக்கு, 565 கோடி;
-
பருவம் தவறி பெய்த கன மழை நிவாரணமாக, 1,116 கோடி ரூபாய்
என, மொத்தம், 1,715 கோடி ரூபாய், அரசால் ஒதுக்கப்பட்டது.விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாக, வேளாண்மை, தோட்டக்கலை, வருவாய்த் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து, பயிர் சேத கணக்கெடுப்பு பணிகளை விரைந்து முடித்தனர்.
ரூ.1147 கோடி இழப்பீடு வழங்கல்
பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தகவல்கள் கணினிமயமாக்கப்பட்டு, வேளாண் மற்றும் தோட்டக்கலை இயக்குனர் அலுவலகங்களில், ஆய்வு செய்யப்பட்டு, விவசாயிகளின் வங்கி கணக்குகளில் , நிவாரண நிதி வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை, சுமார் ரூ. 1,147 கோடி பணம் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளு. மீதுமுள்ள 568 கோடி ரூபாயை, விரைவில் பட்டுவாடா செய்வதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க...
வாழை சாகுபடியில் சொட்டுநீர் பாசனம் அமைத்தால் விளைச்சல் அதிகரிக்கும் - தோட்டக்கலைத்துறை அறிவுரை
புதிய வேளாண் சட்டம் விவசாயிகளை பாதுகாப்பதோடு உரிய விலை பெற்றுத் தரும் - நிர்மலா சீதாராமன் பேச்சு!
மகசூல் விளைச்சலை அளவிட ட்ரோன்களை பயன்படுத்தலாம்! - வேளாண்துறைக்கு அனுமதி!
வாடகைக்கு நெல் அறுவடை இயந்திரம் வனியோகம் - விவசாயிகள் பயன்பெற அழைப்பு!!