பீ.டி.லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை அளிக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி.
சிவில் சர்வீஸ் (civil service) ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் (IAS,IPS,IFS) உள்ளிட்ட தேர்வுகளுக்கான இலவச பயிற்சியை பீ.டி.லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை வழங்க முன் வந்துள்ளது. இந்த இலவச பயிற்சி குறித்து பீ.டி.லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் இயக்குநர் மற்றும் தமிழக அரசின் முன்னாள் முதன்மை செயலாளருமான எஸ்.எஸ்.ஜவஹர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சிவில் சர்வீஸ் படிக்க விரும்பும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் அனைவரும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஃபவுண்டேஷன் கோர்ஸ் ஃபார் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சியை பீ.டி.லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை வழங்க உள்ளது.
வரும் 28 ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஆகிய இரு நாட்களிலும் காலையில் 10:30 மணிக்கு சென்னை வேம்பேரி, ஈ.வி.கே சம்பத் சாலையில் அமைந்துள்ள பீ.டி.லீ செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் வளாகத்தில் உள்ள போட்டித் தேர்வுக்கான சிறப்பு பள்ளியில் இலவச அறிமுக வகுப்பு நடத்தப்பட உள்ளது.
ஆர்வமும் விருப்பமும் உள்ள மாணவ மாணவியர்கள் இவ்விரண்டு நாட்களிலும் சென்று நேரில் பதிவு செய்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம். இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விவரங்களை அறிய மற்றும் முன் பதிவு செய்ய,
தொலைபேசி எண்கள்- 044-26430029
8668038347
K.Sakthipriya
Krishi Jagran