வரும் பிப்ரவரி 1 முதல், சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. கோவிட் பரவல் அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல மாநகராட்சி தடை விதித்திருந்தது. கோவிட் பரவல் குறைய துவங்கிய நிலையில், தமிழக அரசும் சில தளர்வுகளை அளித்திருந்தது.
இந்நிலையில் சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு வரும் பிப்.,1 முதல் மக்கள் செல்லலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஒமைக்ரான் (Omicron)
இந்தியாவில் பல மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. அதன் காரணமாக தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு ஜனவரி 2 ஆம் தேதி பல்வேறு கொரோனா கட்டுப்பாடு உத்தரவுகளை அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக சென்னை மெரினா கடற்கரையில் (Chennai Merina Beach) மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
கடற்கரையில் அனுமதி (Allowed to beech)
கடற்கரைகளில் கூட்டமாக கூடக்கூடாது. மாஸ்க் அணிந்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடித்து கடற்கரையில் பொழுதைக் கழிக்க வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!