News

Friday, 30 December 2022 12:53 PM , by: R. Balakrishnan

January Month Bank holidays

வங்கிகள் பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருகின்றன. சேமிப்பு, முதலீடு, பணம் எடுப்பது, பணம் போடுவது, பென்சன் உள்ளிட்ட பல்வேறு அவசிய சேவைகளுக்கு வங்கி முக்கியமாக இருக்கின்றன.

வங்கி விடுமுறை (Bank Holidays)

இதுமட்டுமல்லாமல், தொழில், வணிகம் சார்ந்த விஷயங்களுக்கும் வங்கிகள் அவசியமானதாக இருக்கின்றன. எனவே, ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியம். இதன் மூலம் தேவை இல்லாத அலைச்சலையும், நேர விரயத்தையும் தவிர்க்கலாம்.

ஒவ்வொரு மாதமும் எல்லா ஞாயிற்றுக் கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை உண்டு. இதுபோக இரண்டாம் சனிக் கிழமை மற்றும் நான்காம் சனிக் கிழமை நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இதுபோக பொது விடுமுறை நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை விடுக்கப்படும்.

கடந்த அக்டோபர் மாதத்தில் தீபாவளி, நவராத்திரி என பண்டிகைகள் வந்ததால் வங்கிகளுக்கு நிறைய விடுமுறை நாட்கள் விடுக்கப்பட்டன. அடுத்து நவம்பர் மாதத்திலோ பண்டிககளே இல்லாததால் விடுமுறைகள் குறைவு. டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் மட்டுமே கூடுதல் விடுமுறையாக வந்தது. இந்நிலையில், புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கு எந்தெந்த நாட்களில் விடுமுறை என்பதை பார்க்கலாம். ஜனவரி மாதத்தில் நிறைய பண்டிகைகளும், பொது விடுமுறை நாட்களும் வருகின்றன.

ஜனவரியில் வங்கி விடுமுறை பட்டியல்

  • ஜனவரி 1 - புத்தாண்டு விடுமுறை
  • ஜனவரி 8 - ஞாயிறு விடுமுறை
  • ஜனவரி 14 - இரண்டாம் சனிக் கிழமை
  • ஜனவரி 15 - பொங்கல் பண்டிகை விடுமுறை
  • ஜனவரி 16 - உழவர் திருநாள் விடுமுறை
  • ஜனவரி 22 - ஞாயிறு விடுமுறை
  • ஜனவரி 26 - குடியரசு தினம்
  • ஜனவரி 28 - நான்காம் சனி கிழமை
  • ஜனவரி 29 - ஞாயிறு விடுமுறை

மேலும் படிக்க

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகை: புத்தாண்டில் கிடைக்கப் போகுது!

பழைய பென்சன் திட்டத்தில் இருக்கும் சிக்கல்: பொருளாதார வல்லுநரின் கருத்து!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)