News

Wednesday, 22 December 2021 10:32 AM , by: Elavarse Sivakumar

Credit : Dailythanthi

தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வரும் மே மாதத்தில் பொதுத்தேர்வு நடைபெற வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொடூரக் கொரோனா (Cruel corona)

தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடியக் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, சுமார் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.

பள்ளிகள் மூடல் (Closing of schools)

அரசு மேற்கொண்ட தீவிர முயற்சியின் பயனாகக் கொரோனாத் தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து,பள்ளிகள் திறக்கப்பட்டன.கடந்த ஆண்டு நோய்த்தொற்று காரணமாக பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டன.

பாடத்திட்டங்கள் குறைப்பு (Curriculum reduction)

இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்தப்படுமா? நடத்தப்படாதா? என்ற கேள்விகள் எழுந்த நிலையில், கண்டிப்பாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் விதமாக பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டன.

மே மாதம் (May Month)

அதன்படி, பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் விதமாக பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்து வருகின்றனர். அரையாண்டுத் தேர்வு நடத்தப்படாத நிலையில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இருப்பினும், 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே மாதத்தில் நடைபெற இருப்பதாகவும், அதற்கான அட்டவணை ஓரிரு நாளில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர்கள் உறுதிப்படுத்தவில்லை.

விடுமுறை கிடையாது (No holidays)

இதற்கிடையில் அரையாண்டு தேர்வு இந்த ஆண்டு கிடையாது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், வழக்கமாக தேர்வு இருக்கும் காலங்களில் விடப்படும் அரையாண்டு விடுமுறையும் இருக்காது என்றேத் தெரிகிறது.

மேலும் படிக்க...

வெறும் ரூ.291க்கு லேப்டாப்-Flipkart Sale offer!

ரிசர்வ் வங்கி எச்சரிக்கை: அதிக வட்டி அதிக ஆபத்து!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)