பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 3 January, 2023 9:00 PM IST
JALLIKATTU BULL WHILE PLAYING

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு/மஞ்சுவிரட்டு/வடமாடு நிகழ்ச்சி நடத்த விழா ஒருங்கிணைப்பாளர்கள் 1 மாதத்திற்கு முன்னதாகவே விண்ணப்பம் செய்ய வேண்டும்,அனுமதி கோரி வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலினை செய்து, அரசிதழில் பதிவு செய்ய  விழா நடைபெறுவதற்கு 20 தினங்களுக்கு முன்னதாக சம்மந்த ப்பட்ட கிராமம் மற்றும் விழா நடைபெறும் நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு அரசாணை பெறுவதற்கு 20 தினங்களுக்கு முன்னதாக சம்மந்தப்பட்ட கிராமம் மற்றும் விழா நடைபெறும் நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு அரசாணை பெறுவதற்கு கால்நடை பராமரிப்புத்துறை ஆணையருக்கு கருத்துரு அனுப்பப்பட வேண்டும் என அரசால் ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது இதனை முறையாக பின்பற்ற வேண்டும்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கான முன்பதிவு முறையை மாவட்ட நிர்வாகம் நிர்ணயிக்கும் எண்ணிக்கையில் இணையத்தளம் வாயிலாக அறிமுகம் செய்யப்படவுள்ளது .இதனை காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் இணையத்தளத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பம் செய்துகொள்ள வேண்டும். அதன்பேரில், உரிய ஆவணங்கள் மற்றும் மருத்துவ சான்றிதழின் அடிப்படையில், பரிசீலினை செய்து தகுதியான மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை மாடுகளுக்கு முறைப்படி அனுமதி வழங்கப்படும்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், பார்வையாளர்களும் மற்றும் ஊடகத்துறையை சார்ந்தவர்களும் அரசின் நிலையான வழிகாட்டு விதி முறைகளை கடைபிடித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு/மஞ்சுவிரட்டு/வடமாடு போன்ற நிகழ்ச்சிகளை பாதுகாப்பாகவும் அரசின் வழிகாட்டுதலின்படியும் சிறப்பாக நடத்திட போதிய ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு அவர்கள் கேட்டுக்கொண்டார்.

ஜல்லிக்கட்டு தமிழரின் பாரம்பரிய விளையாட்டு, தமிழரின் போராட்டத்தினால் நமக்கு கிடைத்த மாபெரும் இன்பக்கணி. அதை போற்றி காக்கவேண்டியது நம் முதல் கடமை அரசு அறிவித்த விதிமுறைகளை பின்பற்றி நாம் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவோம்.

மேலும் படிக்க:

புத்தாண்டு பரிசாக 4% DA உயர்வு, மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்

அஞ்சல் துறை வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

English Summary: PUDHUKKOTTAI JALLIKATTU NORMS
Published on: 03 January 2023, 05:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now