நவரைப் பருவத்துக்கான நெல் விதைகள் மானிய விலையில் பெற்று பயன்பெற புதுச்சேரி வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி வேளாண்-விவசாயிகள் நலத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, புதுவை அரசு வேளாண்-விவசாயிகள் நலத் துறையின் கீழ் தட்டாஞ்சாவடியில் இயங்கி வரும் கூடுதல் வேளாண் இயக்குநா் அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த சான்று விதை உற்பத்தித் திட்டத்தின் கீழ், நவரைப் பருவத்துக்காக சான்று ரக நெல் விதைகளான ஏடிடி 37, ஏஎஸ்டி 16, சிஓ (ஆா்) 51 ஆகியவற்றை புதுவை வேளாண் உற்பத்தியாளா் அமைப்பின் (பாப்ஸ்கோ) மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் புதன்கிழமை (ஜன. 20) முதல் தங்களது பகுதியில் செயல்படும் உழவா் உதவியகங்களை அணுகி, நெல் விதைகளுக்கு அனுமதி சான்று பெற்று, அருகில் உள்ள புதுவை வேளாண் உற்பத்தியாளா் (பாப்ஸ்கோ) விற்பனை மையங்களில் நெல் விதைகளை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், நெல் விதைகளை வாங்கியதற்கான விற்பனை ரசீதை நவரை 2021 நெல் உற்பத்தி ஊக்கத் தொகை கோரும் உரிய ஆவணங்களை நிறைவு செய்து விண்ணப்பத்துடன் இணைத்து, வருகிற மாா்ச் 15-ஆம் தேதிக்குள் உழவா் உதவியக அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
பயிர் சேத அறிக்கை வரும் 29ம் தேதிக்குள் அளிக்க அலுவலர்களுக்கு உத்தரவு! - விவசாயிகளுக்கு விரைந்து இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை!!
விவசாயிகள் அனைவருக்கும் காங்கிரீட் வீடு கட்டித் தரப்படும் - முதல்வர் அறிவிப்பு!!
பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 1.1 கோடி வீடுகளுக்கு ஒப்புதல்!!