
நெல் உள்ளிட்ட 14 வகையான காரிப் பருவ பயிர்களின் கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய மந்திரி அனுராக் தாகூர் அறிவித்தார்.
கொள்முதல் விலை (Purchase Price)
காரிப் பருவ பயிர்களான நெல் குவிண்டாலுக்கு ரூ.100, எள் குவிண்டாலுக்கு ரூ.523, பாசி பருப்பு குவிண்டாலுக்கு ரூ.480 , சூரியகாந்தி விதை குவிண்டாலுக்கு ரூ.385 உயர்த்தப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அனுராக் தாக்கூர், “விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் வேளாண் பொருட்களின் குறைந்தபட்ச கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
நேற்று காலை நடந்த 2022-23 சந்தைப்படுத்துதல் காலத்திற்கான கரீஃப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு ஆலோசனை கூட்டத்தில், சில முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.
அதன் முடிவில் தான் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இலாபகரமான விலையை உறுதி செய்யவும், கீழே உள்ள பயிர் பல்வகைப்படுத்துதலை ஊக்குவிக்கவும் 2022-23 சந்தைப்படுத்துதல் பருவத்திற்கான காரிப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு உயர்த்தியது.
மேலும் படிக்க