News

Wednesday, 27 March 2019 07:10 PM

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தனது தேர்தல் பிரசாரத்தின் போது ஏழை  மக்களுக்கு தலா 6 ஆயிரம் வீதம் 5 கோடி குடும்பங்களுக்கு 72 ஆயிரம் வழங்கப்படும் என கூறினார்.

அவர் கூறுகையில், தங்களுது தலையாய நோக்கம் நாட்டில் உள்ள வறுமையை ஒழிப்பதாகும்.எனவே முதல் கட்ட நடவடிக்கையாக பின் தங்கிய, பிற்படுத்தப்பட்ட  சுமார் 5 கோடி குடும்பங்களுக்கு, மாத வருமானமாக தலா 6 ஆயிரம் ரூபாய் நேரிடையாக அவர்களது வங்கி கணக்குகளில் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் நேரிடையாக 5 கோடி குடும்பங்களும், மறைமுகமாக சுமார் 20 கோடி மக்களும் பயன்பெறுவர் என நம்ப படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களுடன் கலந்து ஆலோசனை செய்து, பின்னர் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறினார். மேலும் அவர் கூறுகையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்து, அதற்கான கணக்கீடுகளையும் செய்தாகிவிட்டது என்றார். 

இந்த ஆட்சியில் மக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். அவர்களை வறுமையிலிருந்து மீட்டேடுப்பதே முக்கிய நோக்கமாகும். மேலும் இந்த திட்டம் மற்ற திட்டங்களுக்கு முன் மாதிரியாக இருக்கும்  என கூறினார்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)