இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 12 April, 2022 5:04 PM IST
Railway Jobs 10th Class Students can Apply..

கிழக்கு ரயில்வே மண்டலத்தின் பல்வேறு பிரிவுகளில், மொத்தம் 2,972 பணியிடங்கள் அப்ரண்டீஸ் முறையில் நிரப்பப்பட உள்ளன. கிழக்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள ரயில்வே ரெக்ரூட்மென்ட் பிரிவின் கீழ், தகுதிவாய்ந்த அனைவரும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம்.

பணி நியமன நடவடிக்கைகள் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பம் செய்வதற்கான வாய்ப்பு மே 10ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. மொத்தம் உள்ள 2,972 பணியிடங்களில் 659 இடங்கள் ஹௌரா மண்டலத்திலும், 612 இடங்கள் லிலுவா மண்டலத்திலும், 312 பணியிடங்கள் சியால்டா மண்டலத்திலும் உள்ளன. இது தவிர கஞ்சிரபாரா, மால்டா, அர்சோனல், ஜமல்பூர் ஆகிய மண்டலங்களிலும் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் மூலமாக மட்டுமே சமர்பிக்கப்பட வேண்டும் என்பதை பணி ஆர்வலர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

பணி நியமனத்திற்கான தகுதி:

வயது வரம்பு : அப்ரண்டீஸ் பணியில் சேருவதற்கான வயது வரம்பு 15 முதல் 24 ஆகும்.

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்விகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் என்சிவிடி அல்லது எஸ்சிவிடி போன்ற அமைப்புகள் விநியோகிக்கும் தேசிய வர்த்தகச் சான்றிதழ்களை விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள்:

ரயில்வே துறையில் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்பாக சில ஆவணங்களை விண்ணப்பதாரர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

  • சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கையெழுத்துடன்.
  • 8ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் ஸ்கேன் செய்யப்பட்ட காப்பிகள்.
  • என்சிவி அல்லது எஸ்சிவிடி அமைப்பில் பெற்ற ஐடிஐ சான்றிதழ்கள்

ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி?

  • கிழக்கு ரயில்வே மண்டலத்தின் அதிகாரப்பூர்வ www.rrcer.com இணையதளத்தில் லாக் ஆன் செய்யுங்கள்.
  • ஹோம்பேஜ் பக்கத்தில் உள்ள ரெக்ரூயிட்மெண்ட் லிங்க் மீது கிளிக் செய்யவும்.
  • இங்கு கேட்கப்பட்டுள்ள விவரங்களை உள்ளிடவும்.
  • தேவையான ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட காப்பிகளை இணைக்கவும்.
  • நீங்கள் கொடுத்திருக்கும் தகவல்களை சரிபார்த்த பிறகு, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தவும்.
  • விண்ணப்பம் செய்த பிறகு, எதிர்கால பயன்பாடு கருதி அதன் நகலை உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

அப்ரண்டீஸ் பணிகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். எனினும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவில் வரும் விண்ணப்பதாரர்கள் இந்தக் கட்டணத்தை செலுத்த தேவையில்லை. வேலைவாய்ப்பு குறித்த விரிவான தகவல்களுக்கு, கிழக்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள அறிவிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க..

ரயில்வே ஆட்சேர்ப்பு 2022 : விண்ணப்பிக்க கடைசித் தேதி பிப்ரவரி 16!

English Summary: Railway Jobs - 10th Class Students can Apply!
Published on: 12 April 2022, 05:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now