வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
தெற்கு வங்கக் கடல் மற்றும் தமிழக கடலோர பகுதியில் 9 மற்றும் 10 தேதியில் (இன்றும்,நாளையும்) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. மேலும் காற்றின் சுழற்சி தமிழகம் நோக்கி நகர இருப்பதாகவும் மற்றும் கடலோர மாவாட்டங்களில் வெப்பநிலை உயர்ந்திருப்பதால் அதிக வெப்பச்சலனம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் நேற்றைய வானிலை அறிக்கையில் அறிவித்திருந்தது.
9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
அதிக பட்ச மழை பொழிவாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 5 செ.மீ மழையும், கூடலூர் பஜார், சின்னக்கல்லாறில் தலா 3 செ.மீ மழையும், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மேற்கு மத்திய வங்கக் கடலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதன் காரணமாக மேற்கு மத்திய வங்கக் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையத்தால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையின் தீவு நகரமான தளபாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 70 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மீண்டும் கனமழை துவங்கியுள்ளதால் கடந்த 2 நாட்களாக ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
போபாலில் மழை நீடிப்பு
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் பெய்துவரும் கனமழையால் சாலைகளில் மழை நீர் மிகுதியாக தேங்கி உள்ளது. இதனால் வாகனப் போக்குவரத்து தடைபட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள பல்வேறு வீடுகள் மழை நீரால் மூழ்கியுள்ளன மற்றும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
K.Sakthipriya
Krishi Jagran