கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் சேதமடைந்த வீடுகளுக்கு மழை நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் (CM Stalin) அறிவித்துள்ளார். சோகத்தில் ஆழ்த்தியுள்ள குமரி மக்களுக்கு, முதல்வரின் அறிவிப்பு சற்று ஆறுதலை அளித்துள்ளது.
வெள்ளப்பெருக்கு
வங்கக்கடலில் உருவான, யாஸ் புயலின் (Yaas cyclone) தாக்கம், தமிழகத்தின் கன்னியாகுமரி வரையில் இருந்தது. கன்னியாகுமரியில் புயல், கனமழையால் பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. புத்தேரி, கோட்டார், வடசேரி உள்ளிட்ட பல இடங்களில் வீடுகள் சில இடிந்தன. தாழ்வான பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. கருங்கல் அருகே ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியகுளம், காக்கைகுளம், தாமரைகுளம் என மூன்று குளங்கள் நிரம்பி வழிந்து, 150க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் (Flood) சூழ்ந்துள்ளது.
நிவாரணம்:
இதன்படி, மழையால் முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும். பகுதியாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.4,100 நிவாரணமாக (Relief Fund) வழங்கப்படும்.
மேலும் இடுபொருள் நிவாரணமாக, மானாவரி, நீர்பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பல்லாண்டு கால பயிர்களுக்கு நிவாரணமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்றும், இடுபொருள் நிவாரணமாக ரூ.20 ஆயிரமும், மானாவாரி பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க
சூறாவளி காற்று வீசியதால் 250 ஏக்கர் முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்தன! இழப்பீடு வேண்டி விவசாயிகள் கோரிக்கை
பொள்ளாச்சியில் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ 9¼ கோடி ஒதுக்கீடு