ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஆண்டுதோறும் கடலோர மாவட்டங்களான சென்னை, கடலூர் உள்ளிட்டவற்றிலும், காவிரி டெல்டா மாவட்டங்ளான நாகை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிக்ளிலும் கனமழை கொட்டித் தீர்ப்பது வழக்கம்.
வரலாறு காணாத மழை
இந்த ஆண்டும் டெல்டா மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறையில் பத்து நாட்களுக்கு முன் கனமழை கொட்டித் தீர்த்தது. மாவட்டத்துக்கு உட்பட்ட சீர்காழியில் கடந்த 11 ஆம் தேதி ( நவம்பர் 11) ஒரே நாளில் 122 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. கடந்த 122 ஆ்ண்டுகளில் அங்கு இதுபோன்ற பேய் மழை பெய்ததில்லை என்று வானிலை ஆய்வு மைய புள்ளிவிவரங்கள் தெரிவித்திருந்தன.
இதேபோ்ன்று மாவட்டத்துக்கு உட்பட்ட தரங்கம்பாடி வட்டமும் கனமழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்விரு வட்டங்களிலும் குடியிருப்புகள் வெள்ளக்காடாய் ஆனதுடன், நெற்பயி்ர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி வீணாய் போகின.
முதல்வர் ஆய்வு
கனமழையால் பெருத்த சேதத்தை சந்தித்துள்ள சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளையும், வயல்வெளிகளை அவர் நேரில் பார்வையிட்டார். அ்ப்போது பருவ மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களைச் சேர்ந்தவர்களின் ரேஷன் அட்டைக்கு தலா 1000 ரூபாய் நிவாரணம் வழங்கும்படி மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
1000 ரூபாய்
மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களை சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம் அளிக்கும் பணி நாளை மறுநாள் (நவம்பர் 24) தொடங்கும் என்று மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இன்று அறிவித்துள்ளார்.
குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு அவரவர்கள் மாதந்தோறும் ரேஷன் பொருட்களை வாங்கும் நியாயவிலை கடைகளிலேயே அவர்களுக்கான மழை நிவாரணத் தொகை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு!
பொங்கலுக்கு தயாராகும் ரேஷன் கடைகள்: பொதுமக்களுக்கு வேட்டி, சேலை, ரொக்கப் பரிசு!