இன்னும் 2 நாட்களில் சென்னை மற்றும் புதுவையில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடும் வெப்ப நிலை மாறி தற்போது மிதமான சூழ்நிலை நிலவுகிறது.
தென்மேற்குப் பருவ மழையானது கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்து வந்தது. வட தமிழகம் அனல் காற்றால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தது. தற்போது அந்நிலை மாறி நேற்று தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது.
வளிமண்டலதில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்னும் இரு தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையின் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகம் மற்றும் புதுவையில் நிலவி வந்த கடும் வெப்பம் முடிவுக்கு வரும். வெப்பநிலையானது 41 டிகிரிலிருந்து 38 டிகிரியாகக் குறைந்துள்ளது.
ஆறு மாதங்களுக்கு பிறகு மழை பெய்வதால் இம்மழையானது மேலும் 4 முதல் 5 நாட்களுக்கு பெய்ய வாய்ப்புள்ளது. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த இம்மழை போதுமானதாக இருக்காது. எனினும் அதற்கான ஆயுதத்தை செய்து வைத்தால் எதிர் வரும் வட கிழக்கு பருவ மழையில் நிலத்தடி நீர் மட்டத்தை கணிசமாக உயர்த்தலாம் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.
Anitha Jegadeesan
Krishi Jagran