சுட்டெரிக்கும் வெயிலால் சுருண்டு கிடந்த மதுரை மக்கள் சித்திரை திருவிழா கொடியேற்றத்தின் போது பெய்த மழையால் மகிழ்ந்தனர். மதுரை மாவட்டத்தில் நேற்று 2வது நாளாக பரவலாக மழை பெய்தது. மதியம் 2:00 மணிக்கு பாலமேடு, வாடிப்பட்டி, அலங்காநல்லுாரில் அரைமணி நேரம் மழை பெய்தது. கல்லுப்பட்டி, பேரையூர், சாப்டூர், மேலுார், கொட்டாம்பட்டி, மேலவளவு, திருமங்கலத்தில் மதியம் 3:00 மணிக்கு துவங்கிய மழை, மாலை வரை சாரலாய் துாவியது.
கனமழை (Heavy Rain)
அவனியாபுரம், பெருங்குடி, திருப்பரங்குன்றத்திலும் கனமழையும், துாறலுமாக இருந்தது.மதுரை தல்லாகுளம், காளவாசல், மீனாட்சியம்மன் கோயில், மாட்டுத்தாவணியில் மதியம் 1:15 மணிக்கு வானம் இருண்டு மழை கொட்டியது. மதியம் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டுச் சென்றன.
மழையளவு (Rain Range)
நேற்று முன்தினம் பெய்த மழையின் சராசரி 3.16 மி.மீ., மதுரை வடக்கில் 21.7, ஏர்போர்ட் 17.8, மேட்டுப்பட்டி 17.6, தல்லாகுளம் 6மி.மீ. மழை பதிவானது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 125.75 அடி, நீர் இருப்பு 3780 மில்லியன் கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 850, வெளியேற்றம் 100 கனஅடி. வைகை அணை நீர்மட்டம் 68.54 அடி, நீர் இருப்பு 5455 மில்லியன் கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 35, வெளியேற்றம் 72 கனஅடி.
மதுரை சித்திரைத் திருவிழாவில் ஏப்ரல் 16 ஆம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வுக்காக, வைகை அணையிலிருந்து நேற்று முன்தினம் ஆற்றின் வழியாக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் தண்ணீர் திறப்பு!
பறவைகளுக்கு தண்ணீர் வைக்கும் மாணவர்களுக்கு பரிசு: இளைஞர்கள் அசத்தல்!