தமிழகம் முழுவதும் வழங்கப்படுகிற ரேஷன் பொருட்களை மூன்று மாதங்களாக வாங்க தவறிய குடும்ப அட்டைகளுக்கு நடவடிக்கை எடுக்க உணவுப்பொருள் நுகர்வோர் பாதுகாப்பு துறை முடிவெடுத்துள்ளது. மூன்று மாதங்களாக 13 லட்சம் குடும்ப அட்டைகள் ரேஷன் பொருட்களை வாங்க தவறியிருப்பதாக அரசு நடத்திய ஆய்வில் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் விலைவாசி உயர்ந்துவரும் நேரத்தில், எளியமக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் விதத்தில் தமிழக அரசின் ரேஷன் பொருட்கள் பயன்படுகின்றன. ஒருசிலர் ரேஷன் பொருட்களை கடத்தி, அதிக விலைக்கு விற்கும் குற்றத்தில் ஈடுபட்டாலும், இந்த திட்டம் பெரும்பாலான மக்களுக்கு பயனாகவே இருக்கிறது. மேலும், போலி குடும்ப அட்டைகளை தவிர்ப்பதற்காக 2016ஆம் ஆண்டு ரேஷன் விநியோகிக்கும் முறையை கணினி மையமாக மாற்றினர்.
இதனால் போலி குடும்ப அட்டைகள் ஓரளவிற்கு ஒழிக்கப்பட்டன. 2016ஆம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் இரண்டு கோடியே 60 லட்சம் குடும்ப அட்டைகள் பதிசெய்யப்பட்டிருந்தன.
இதற்கிடையே, கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் பொருட்களை வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளை கணக்கெடுக்கும் பணியில் இறங்கியுள்ளது உணவுப்பொருள் நுகர்வோர் பாதுகாப்பு துறை. அப்போது சுமார் 13 லட்சம் குடும்ப அட்டைகள் ரேஷன் பொருட்களை வாங்க தவறியிருப்பதாக அரசு நடத்திய ஆய்வில் வெளியாகியுள்ளது.
ரேஷன் பொருட்களை வாங்காத குடும்பங்களுக்கு மதுரை மாவட்ட வழங்கல் அலுவலர்கள் தொடர்புகொண்டு கேள்வி எழுப்பினர். அதில் தெரியவந்த தகவல்களை அறிக்கையாக உணவுப்பொருள் நுகர்வோர் ஆணையருக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தகவல்களில் தெரியவந்தது என்னவென்றால், மூன்று மாதங்களாக பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகள் ஒருவேளை போலியானதாக இருக்கலாம், குடும்ப தலைவர் இறந்திருக்கலாம் அல்லது வேறு மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதையொட்டி உபயோகிக்காக குடும்ப அட்டைகள் தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.
உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....