புதுச்சேரி, தமிழகம் உள்பட அனைத்து மாநிலத்தில் இருந்து சிகிச்சைக்கு வரும் ஏழைகள் அனைவரும் இனி ரேஷன் கார்டை காட்டுவதும் அவசியமில்லை என்று ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகளின் போராட்டம் மற்றும் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை தொடர்ந்து தனது அறிவிப்பை திரும்ப பெற்றது.
புதுச்சேரி மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அதாவது ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற ரேஷன் கார்டு கட்டாயம் இல்லை என்று அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதை பலரும் ஆதரித்துள்ளனர்.
புதுச்சேரி கோரிமேட்டில் மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை இயங்கி கொண்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கொரோனாவுக்கு பிறகு ஒரு நாளுக்கு ஒவ்வொரு துறையிலும் அதிகபட்சமாக 25 நோயாளிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
இதற்காக ஜிப்மர் மருத்துவமனை தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்த பிறகு மருத்துவருடன் ஆலோசனை செய்த பிறகு தான் அனுமதி வழங்கப்படுகிறது.
கொரோனா குறைந்து வரும் சூழ்நிலையிலும் ஜிப்மர் நிர்வாகம் அதை கருத்தில் கொள்வதில்லை. இந்நிலையில் ஜிப்மர் நிர்வாகம் அனைத்து துறைகளுக்கும் அண்மையில் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
அந்த சுற்றறிக்கையில் அக்டோபர் 1 முதல் வெளிப்புற நோயாளியாக சிகிச்சைக்கு வருபவர்கள் கூட ஏழை மக்கள் தான் என்பதை நிருபிக்க பிபிஎல் (BPL) ரேஷன் கார்டை கையோடு எடுத்து வர வேண்டும்.
ஜிப்மர் மருத்துவமனையில் மாத வருமானம் 2499/- ரூபாய்க்கும் கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே இலவச சிகிச்சை அளிக்கபப்ட்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை ஜிப்மர் தரப்பு பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகள் தொடங்கி பலரும் எதிர்ப்பை தெரிவித்து போராட்டங்களையும் நடத்தினர்.
இந்நிலையில் இன்று அனைத்து துறைகளுக்கும் ஜிப்மர் நிர்வாகம் புதிய உத்தரவை வழங்கியுள்ளது. அதில் "சிகிச்சைக்கு வரும் ஏழைகள் தங்கள் பெயர்களை பதிவு செய்யும் போது ரேஷன் கார்டை காட்ட அவசியம் இல்லை என்று கூறியுள்ளது.
அதே நேரத்தில் ஏழை நோயாளிகள் தங்கள் வசதிக்காக ரேஷன் கார்டை காட்டுவதை ஊக்குவிக்க வேண்டும் அனால் இது முற்றிலும் அவர்களின் சுய விருப்பம் தான். பொதுவார்டில் நோயாளிகள் அனுமதிக்கப்படும்போது வருமானம் மாதத்துக்கு ரூ. 2499க்கு கீழே இருந்தால் கட்டணம் வசூலிக்கப்படாது.
வெளிப்புற சிகிச்சை, மருந்து தருவதில் பழைய முறை தொடர்வதாகவும் அவசர சிகிச்சைப் பிரிவில் மாத வருவாயை அடிப்படையாக கொள்ளாமல் இலவச சிகிச்சைகள் வழங்கப்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: