தமிழக ரேஷன் கடைகளில் பல புதிய செயல்பாடுகள் அம்பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பணப்பரிவர்த்தனை குறித்த புதிய அப்டேட் மக்களை குஷியாக்கி உள்ளது.
ரேஷன் கடைகள் (Ration Shops)
ரேஷன் கடைகளின் மூலம் தான் அரசின் அனைத்து வித நலத்திட்டங்களும் மக்களை நேரடியாக சென்றடைகிறது. இதனால் தான் மக்கள் ரேஷன் கடை குறித்த புதிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். மேலும், கூட்டுறவு துறை தொடர்பான காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகளும் மக்களை அதிகம் கவனிக்க வைக்கிறது.
ஆன்லைன் பணப் பரிவர்த்தனை (Online Transaction)
இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ள தகவல் ரேஷன் கடை பயனர்களை அதிகம் கவர்ந்துள்ளது. அதாவது இனி தமிழக ரேஷன் கடைகளில் PhonePe, GPay, Paytm போன்ற UPI பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மக்கள் அதிகம் ஆன்லைன் பணபரிவர்தனைகளை மட்டுமே பயன்படுத்தி வருவதால், இந்த அறிவிப்பு மக்களை குஷியாக்கி உள்ளது.
ரேஷன் கடைகளில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை நடைபெறும் பட்சத்தில், இனி சில்லரைப் பிரச்சனைகள் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும், சாமானிய மக்களுக்கு இது கொஞ்சம் கஷ்டம் தான் என்றாலும், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செய்யத் தெரிந்தவர்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்றால் தான் இது நன்மையைத் தரும்.
மேலும் படிக்க
ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு ஜாக்பாட்: அதிகரிக்கும் விடுமுறை நாட்கள்!